Youtube யில் புதிய டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் ஆடியோவை வார்த்தைகளில் வடிவில் பெறலாம்.

Updated on 14-Mar-2022
HIGHLIGHTS

கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும்.

இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும். ஏற்கனவே யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடத்தேவையில்லை. வீடியோக்கள் பக்கத்தில் இருக்கும் டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அதில் நாம் தேவையான வார்த்தைகளை தேடி படிக்கலாம்.

தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, வரிகளை நேரடியாக தேடும் திறன் இல்லாமல், டெஸ்க்டாப் பதிப்பை விட இது சற்று குறைவாகவே பயனுள்ளதாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :