Xiaomi யின் அசத்தலான 3 புதிய டிவி அறிமுகம் இதில் 77 இன்ச் 4K ஸ்க்ரீன் மற்றும் 70 வாட் கொண்டுள்ளது.

Updated on 12-Aug-2021
HIGHLIGHTS

2 Mi TV சீரீஸின் கீழ் 3 புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்

சியோமி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்க்ரீன்களுடன் Mi TV 6 4K OLED டிவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது

மி டிவி ஓஎல்இடி 77 இன்ச் மாடல் தான் இப்போது நிறுவனத்தின் மிக பிரீமியம் மற்றும் மிகப்பெரிய ஸ்மார்ட் டிவி ஆகும்.

Mi Mix 4 மற்றும் Mi Pad 5 சீரிஸ் தவிர, Xiaomi 2 வது ஜெனரேஷன் Mi TV Master/Lux Series TV களையும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிட்டது. இந்த டிவி 77 இன்ச் 4K OLED ஸ்க்ரீன் மற்றும் மிக மெல்லிய பேசெல்ஸ் உடன் வருகிறது. இது தவிர, சியோமி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்க்ரீன்களுடன் Mi TV 6 4K OLED டிவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Mi TV களின் விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் விலை தொடர்பான ஒவ்வொரு தகவலையும் பார்க்கலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் நேற்று (ஆகஸ்ட் 10) சியோமியின் உள்நாட்டு சந்தையில் சுமார் மூன்று மணி நேரம் நீடித்த மெகா வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டன.

புதிதாக அறிமுகமான மி டிவி ஓஎல்இடி 77 இன்ச் மாடல் தான் இப்போது நிறுவனத்தின் மிக பிரீமியம் மற்றும் மிகப்பெரிய ஸ்மார்ட் டிவி ஆகும். இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi TV QLED 75 மாடலின் மேம்பட்ட பாதிப்பாகும்.

உடன் அறிமுகமான புதிய Mi TV 6 OLED என்பது சியோமியின் இரண்டாம் தலைமுறை OLED டிவி ஆகும், இது சில மேம்படுத்தல்கள் மற்றும் சற்றே குறைக்கப்பட்ட ஆரம்ப விலையுடன் வருகிறது.

Mi TV 6 OLED அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை:

சியோமி Mi TV 6 OLED ஆனது 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்க்ரீன் திரை அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை ஸ்மார்ட் டிவி குறுகிய பெசல்களுடன் வருகிறது மற்றும் வெப்பச் சிதறலுக்கு (heat dissipation) உகந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது 97 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்துடன் 4K OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 10-பிட் தொழில்முறை கலர் டெப்த், 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 98.5 சதவீதம் P3 கலர் கேமட் மற்றும் MEMC ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் இதன் டிஸ்பிளே டால்பி விஷன், HDR10, HDR10+மற்றும் HLG க்கான ஆதரவுடன் HDR கன்டென்ட்டையும் ஆதரிக்கிறது.

ஆடியோவிற்கு வரும்போது, நீங்கள் டூயல் சேனல் 12.5W நான்கு யூனிட் ஸ்பீக்கரைப் பெறுவீர்கள். இது IMAX மேம்படுத்தப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ சான்றிதழையும் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி மீடியாடெக் 9638 குவாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது கார்டெக்ஸ் ஏ 55 கோர்களை 1.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் மாலி-ஜி 52 எம்சி 1 ஜிபியூவுடன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை 55 இன்ச் மாடலானது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.65,400 க்கு அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 65 இன்ச் மாடல் ஆனது சுமார் ரூ.88,300 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது..

Mi TV OLED 77 அம்சங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் விலை:

மி டிவி OLED 77 மாடலானது சியோமியின் முதன்மை OLED V21 பேனலைக் கொண்டுள்ளது, இது 10-பிட் கலரைக் கொண்டுள்ளது, மேலும் இது 98.5% DCI-P3 கேமட் மற்றும் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸை உள்ளடக்கியது.

HDMI 2.1 வழியாக மாறக்கூடிய ரெஃப்ரெஷ் ரேட் வீதத்துடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் 4K டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் பேனலுக்கு MEMC தொழில்நுட்பம் உதவுகிறது.

ஆடியோவைப் பொறுத்தவரை, இதன் ஒன்பது ஸ்பீக்கர் 70W 3.1 சவுண்ட் சிஸ்டமை ஹார்மோன் கார்டன் டியூன் செய்கிறது. உடன் இது ஐமாக்ஸ் என்ஹான்ஸ்டு, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது சீனாவில் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.2,30,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :