வாட்ஸ்அப் வழியாக பயனர்கள் பெறும் மெசேஜ்களுக்கு "மிகவும் எளிமையாக பதிலளிக்க" உதவும் ஒரு அம்சம் டெஸ்ட் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாட்ஸ்அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
முன்னதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.
இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது.
வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த reactions அம்சம் – பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்நிறுவனம் தனது பிளாட்பார்மில் – கம்யூனிகேஷன் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய படியாக இருக்கலாம்.
ஸ்டிக்கர்ஸ், GIF மற்றும் ஈமோஜிகளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் அதன் பயனர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவியது. தற்போது அந்த பட்டியலில் ரியாக்ஷன்ஸ் இணைய உள்ளது.
வாட்ஸ்அப் அம்சங்களை ட்ராக் செய்யும் நன்கு அறியப்பட்ட தளங்களில் ஒன்றான WABetaInfo வழியாக வெளியான அறிக்கையின்படி, WhatsApp தற்போது உள்நாட்டில், அதன் message reactions-ஐ சோதிக்கிறது. இதன் பொருள் வழக்கமான பயனர்கள் மற்றும் பீட்டா டெஸ்ட்டர்களால் கூட இந்த நேரத்தில் இந்த அம்சத்தை பெற முடியாது.
இருப்பினும், WABetaInfo ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளது. அது "உங்களுக்கு ஒரு ரியாக்ஷன் கிடைத்துள்ளது. அதை காண உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யவும்" என்கிற மெசேஜ் உள்ளது.
ஆக, பழைய வாட்ஸ்அப் பதிப்புகளுடன் வரவிருக்கும் ரியாக்ஷன்ஸ் அம்சம் பொருந்தாததை இந்த ஸ்க்ரீன்ஷாட் பரிந்துரைக்கிறது