Whatsapp யில் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு சாட் டிரான்ஸ்பர் ஆகும் ஈஸியா

Whatsapp யில் புதிய அம்சம்  ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு சாட் டிரான்ஸ்பர் ஆகும் ஈஸியா
HIGHLIGHTS

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான ஷார்ட் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது

ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே சாட் டிரான்ஸ்பர் செய்வது மிக எளிமையான விஷயமாக இருக்கிறது

பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான ஷார்ட் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே சாட் டிரான்ஸ்பர் செய்வது மிக எளிமையான விஷயமாக இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனிற்கு சாட் டிரான்ஸ்பர் செய்வது சிக்கலான காரியம் ஆகும். இந்த நிலையை விரைவில் மாற்றும் வகையில் வாட்ஸ்அப் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது.

பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் 2.21.20.11 பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து ஐ.ஒ.எஸ்.-க்கு சாட் ஹிஸ்ட்ரியை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருந்தது.

சமீபத்தில் புது ஐபோன் வாங்கியவர்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து சாட் டிரான்ஸ்பர் செய்வது எளிமையாக்கும் புது அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இதற்கான விவரங்கள் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 22.2.74 வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது. புதிய பீட்டா  வெர்ஷனில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுவரை சாட் டிரான்ஸ்பர் செய்ய ஆண்ட்ராய்டு போன்களை புதிய ஐ.ஒ.எஸ். சாதனத்துடன் யு.எஸ்.பி. டைப் சி-டு-லைட்னிங் கேபிள் மூலம் இணைக்க வேண்டும். இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் 'மூவ் டு ஐ.ஒ.எஸ்.' செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo