Whatsapp யில் வொய்ஸ் மெசேஜ் யில் புதிய அம்சம்.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை அறிமுகம்
தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.22.6.7 அப்டேட்டில் இயங்கும்
பிஸ்னஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ளது
வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட தொடர முடியும். இதற்கு முன் ஒரு முறை நிறுத்திவிட்டால் அந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட வேண்டும் அல்லது டெலிட் செய்துவிட வேண்டும் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.
தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.22.6.7 அப்டேட்டில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ளது. இது விரைவில் பிறருக்கும் தரப்படும் என கூறப்படுகிறது.
இதேபோல பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் நமது தொடர்பில் இல்லாதவர்கள் கூட அந்த லிங்கை கிளிக் செய்து அழைப்பில் இணையலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile