மே 18 அன்று, எலக்ட்ரோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்பை தனது புதிய சேவை விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதுடன், பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் அளித்தது. திங்களன்று அரசாங்கத்தின் கடிதத்திற்கு பதிலளித்த வாட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமை நிறுவனத்தின் முதன்மை முன்னுரிமை என்று கூறினார்.
வாட்ஸ்அப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது. மேம்பட்ட பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசு புது பிரைவசி பாலிசி திட்டத்தை கைவிட வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.
தற்போது வாட்ஸ்அப் மத்திய அரசுக்கு பதில் அளித்துள்ளது. மேலும் புது பிரைவசி பாலிசியை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும், இதன் மூலம் அனைத்து சாட்களும் பாதுகாப்பாக இருக்கும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பிரைவசி தான் எங்களின் மிகமுக்கிய குறிக்கோள் ஆகும்.
புது பிரைவசி பாலிசி மூலம் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் மூலம் பயனர் விரும்பினால் அவர்கள் எவ்வாறு வியாபார நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் புது பிரைவசி பாலிசியை ஏற்காதவர்கள் தொடர்ந்து அனைத்து அம்சங்களை இயக்க முடியும்.
முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றம் வாட்ஸ்அப் ஐடி சட்டத்தை மீறுவதாகக் குறிப்பிட்டிருந்தது, அதற்கு வாட்ஸ்அப் பதிலளித்ததன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தரவு பாதுகாக்கப்படுவதால் இது பொருந்துவதாக கூறியது. இந்தியாவின் தற்போதைய டேட்டா பாதுகாப்பு அமைப்பில் விரிவான மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக பிடிபி மசோதா 2019 இல் முன்மொழியப்பட்டது.