whatsapp Payment சேவையை நீடிக்க மத்திய அரசு அனுமதி

whatsapp Payment  சேவையை நீடிக்க மத்திய அரசு அனுமதி
HIGHLIGHTS

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலில் தற்போது வாட்ஸ்அப் இடம்பெற்றுள்ளது.

வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் யு.பி.ஐ. உருவாக்கிக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. யு.பி.ஐ. சார்ந்து இயங்கும் பேமண்ட் சேவைக்கு இந்திய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்.பி.சி.ஐ.) அனுமதி அளித்து இருக்கிறது. என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலில் தற்போது வாட்ஸ்அப் இடம்பெற்றுள்ளது. 
 
 வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் 

வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் யு.பி.ஐ. உருவாக்கிக் கொள்ளலாம். பின் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை பகிர்வதை போன்றே மிக எளிமையாக பணம் அனுப்பலாம். தற்போது யு.பி.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மொத்தம் 21 மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

என்.பி.சி.ஐ. வலைதள விவரங்களின் படி வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவைகளை தனது பேமண்ட் சேவை வழங்குனராக பயன்படுத்த இருக்கிறது. பேமண்ட்ஸ் அம்சம் மூலம் வாட்ஸ்அப், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற சேவைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo