'வாட்ஸ்அப் அதன் Disappearing Messages, அதாவது காணாமல் போகும் மெசேஜ்கள் அம்சத்திற்காக ஒரு புதிய விருப்பத்தை சோதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 90 நாட்களுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சாட்டில் இருந்து குறிப்பிட்ட மெசேஜ்கள் தானாகவே மறைந்துபோக செய்ய வைக்கும் திறனை பயனர்கள் பெறுவார்கள்.
இதனுடன் சேர்த்து 24 மணி நேரத்திற்குப் பிறகு, மெசேஜ்கள் தானாகவே மறைந்து போகும் விருப்பமும் வரலாம் என்று கூறப்படுகிறது, இது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.
நினைவூட்டும் வண்ணம், வாட்ஸ்அப் முதலில் அதன் Disappearing Messages அம்சத்தை கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது, ஆனால் இதுவரை அதிகபட்சமாக ஏழு நாட்களுக்குப் பிறகு தான் மெசேஜ்களை காணாமல் போக செய்யும் விருப்பம் பயனர்களுக்கு கிடைக்கிறது. விரைவில் இந்த அம்சத்தில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படும் என்பது போல் தெரிகிறது.
வாட்ஸ்அப் அம்சங்களை ட்ராக் செய்து அறிக்கை வெளியிடும் பிரபல தளமான WABetaInfo வழியாக வெளியான தககவலின்படி, Android க்கான WhatsApp பீட்டா வெர்ஷன் 2.21.17.16 ஆனது 90 நாட்களுக்குப் பிறகு மெசேஜ்களை மறைய செய்யும் விருப்பத்திற்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது.
இது சார்ந்த ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் WABetaInfo பகிரந்துள்ளது. அது இது ஏழு நாட்களுக்குப் பிறகு மெசேஜ்களை தானாக நீக்குவதற்கான தற்போதைய விருப்பத்துடன் 90 நாட்கள் மற்றும் 24 மணி நேரம் என்கிற விருப்பத்தையும் காட்டுகிறது.ஆக கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வெப் பயனர்களுக்கு 90 நாட்கள் மற்றும் 24 மணி நேர விருப்பத்தை சோதனை செய்ததாக தெரிகிறது
இந்த புதிய விருப்பங்கள் தற்போது வரை வளர்ச்சியிலேயே இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இது பீட்டா டெஸ்ட்டர்களுக்கு கூட இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், இது எதிர்காலத்தில் நேரடியாக அனைவருக்கும் கிடைக்கும்படி கூட அறிமுகம் செய்யப்படலாம்.