பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், அதன் சாட் பாரில் (அதாவது வாட்ஸ்அப்பில் மெசேஜ் டைப் செய்வதற்காக ஒத்துக்க்கப்பட்ட இடத்தில்) ஒரு பிரத்யேக பேமண்ட் பட்டனைச் சேர்க்கிறது.
இந்த புதிய ஷார்ட்கட் ஆனது பயனர்களை சாட் பாரில் இருந்தபடியே விரைவாக பணம் அனுப்ப உதவும் என்று, இந்த அம்சத்தை பற்றிய தகவலை வெளியிட்ட WaBetaInfo-வின் லேட்டஸ்ட் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்ட்களுக்கு அணுக கிடைக்கிறது. இந்த ஷார்ட்கட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.21.1-க்கான வாட்ஸ்அப் பீட்டாவின் ஒரு பகுதியாக பயன்படுத்த கிடைக்கிறது.
ஆனால் புதிய பேமண்ட் பட்டன் ஆனது அட்டாச்மென்ட் ஐகானுக்குள் செல்லும் வேலையை குறைக்கும். இது சாட் பாரிலேயே, அட்டச்மெண்ட் மற்றும் கேமரா பட்டனுக்கு இடையே நிலைநிறுத்தப்படும். ஆகையால், பயனர்கள் முன்பை விட விரைவாக பணம் அனுப்பலாம்.
தற்போது வரை வாட்ஸ்அப் வழியாக ஒரு பயனர் பணம் அனுப்ப அவர் குறிப்பிட்ட சாட்டில் உள்ள அட்டாச்மெண்ட் ஐகானைக் கிளிக் செய்து அதன் பின்னரே பேமண்ட் ஐகானை அணுகலாம். அறியாதவர்களுக்கு இது டாக்குமென்டம் கேமரா, கெளரி, ஆடியோ போன்ற விருப்பங்களுக்கு அடுத்ததாக இருக்கும்.
சில iOS பீட்டா டெஸ்ட்களுக்கும் இந்த ஷார்ட்கர்ட் அணுக கிடைப்பதாக வெளியான WaBetaInfo அறிக்க கூறுகிறது. தற்போது வரை மேம்பாட்டில் உள்ள இந்த அம்சம் எதிர்காலத்தில் புதிய அப்டேட்டுடன் ஒரு பெரிய வெளியீட்டை காணலாம், அதாவது அனைவருக்கும் ரோல்-அவுட் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம், வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் அம்சமானது National Payments Corporation of India (NPCI) உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது 227 க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் நிகழ்நேர கட்டண செயல்முறையை வழங்குகிறது மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இது அணுக கிடைக்கிறது