Whatsapp யில் COVID-19 ஸ்டிக்கர் பேக் அறிமுகம், கொரோனா ஊசி போடுங்க பாதுகாப்பாக இருங்க.
வாட்ஸ்அப், அதன் பயனர்களுக்கு கோவிட் -19 தீம்டு ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது
திய ஸ்டிக்கர் பேக் ஆனது ‘அனைவருக்கும் தடுப்பூசிகள்’.(‘Vaccines for All’) என்று அழைக்கப்படுகிறது
மக்களுக்கு விழிப்புணர்வு, மகிழ்ச்சி, நிவாரணம் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தலாம்.
பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், அதன் பயனர்களுக்கு கோவிட் -19 தீம்டு ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த புதிய ஸ்டிக்கர் பேக் ஆனது ‘அனைவருக்கும் தடுப்பூசிகள்’.(‘Vaccines for All’) என்று அழைக்கப்படுகிறது, மற்றும் இப்போது இந்த ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப்பில் பயன்படுத்த கிடைக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின்படி, இந்த புதிய ஸ்டிக்கர்ஸ் “கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு, மகிழ்ச்சி, நிவாரணம் மற்றும் நம்பிக்கையை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவும், ஒருவருக்கு ஒருவர் பாராட்டுக்களை பகிரவும் உதவும்".
இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அதன் ஹெல்ப்லைன்களைப் பயன்படுத்தி “துல்லியமான தடுப்பூசி தகவல் மற்றும் பதிவு” மூலம் குடிமக்களை அணுக முயற்சித்து வருகிறது என்றும், இதற்காக வாட்ஸ்அப் பிசினஸ் ஏபிஐ மூலம் மெசேஜ்களை அனுப்புவதன் மூலம் ஏற்படும் கட்டணத்தை அது தள்ளுபடி செய்துள்ளதாகவும் வாட்ஸ்அப் கூறுகிறது.
கடந்த சில மாதங்களாக, கோவிட் -19 கேஸ்கள் உச்சத்தில் உள்ளன, இந்தியாவில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் மீண்டும் இரவு ஊரடங்கு உத்தரவுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.
அதன் படி சமீபத்தில் வாட்ஸ்அப் ஊடக அறிக்கையின்படி, இப்போது வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தின் மூலம், நீங்கள் iOS மற்றும் Android சாதனங்களுக்கு இடையில் வாட்ஸ்அப் சேட்களை நகர்த்தலாம். தற்போது, iOS மற்றும் Android க்கு இடையில் WhatsApp ஐ மாற்றும்போது சேட் ஹிஸ்டரி முடிவடைகிறது, அதாவது, நீங்கள் iOS க்கு பதிலாக Android போனை பயன்படுத்தினால் அல்லது Android க்கு பதிலாக iOS போனை பயன்படுத்தினால், WhatsApp ஐ மாற்றும்போது சேட் ஹிஸ்டரி கிடைக்காது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile