வாட்ஸ்அப்பின் ஐபோன் பயனர்கள் viewed once அம்சத்தின் புதுப்பிப்பைப் பெறத் தொடங்கியுள்ளனர். வாட்ஸ்அப்பின் ஒருமுறை பார்க்கப்பட்ட அம்சத்தை இயக்கிய பிறகு, நீங்கள் செய்தியைப் பார்த்தவுடன், செய்தி மறைந்துவிடும். வாட்ஸ்அப்பின் viewed once அம்சத்தை புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகளுடன் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் viewed once அம்சம் தற்போது ஐபோன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்துடன் வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதை நீங்கள் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் (view once) வரும் நாட்களில் அனைவருக்கும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஜூன் மாத வாக்கில் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக மறைந்துவிடும்
புது அப்டேட் விவரங்கள் பேஸ்புக்கின் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மற்ற குறுந்தகவல்களை போன்றே வியூ ஒன்ஸ் மீடியாவும் முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த அம்சத்தின் கீழ் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒன்-டைம் (one-time) ஐகான் மூலம் குறிப்பிடப்படுகிறது. புகைப்படம் அல்லது வீடியோவை பார்த்ததும், அது “opened” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் சாட்களில் ஏற்படும் குழப்பம் தீர்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பின் view once அம்சம் வாட்ஸ்அப் பதிப்பு 2.21.150 ஐபோனில் கிடைக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் '1' ஐகானைத் தட்ட வேண்டும். புகைப்படங்கள் காணாமல் போனவுடன் வீடியோ சேட்களில் காண முடியாது. இது தவிர, மீடியா பைல் சேமிக்கப்படும் இடத்தில்கூட, இந்த அம்சத்துடன் அனுப்பப்பட்ட புகைப்படங்கள்-வீடியோக்கள் தெரிவதில்லை