உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் செயலியான WhatsApp, இந்தியாவில் மில்லியன் கணக்கான பயனர்களின் கணக்குகளை ஜனவரி மாதத்தில் தடை செய்துள்ளது. உண்மையில், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கணக்குகளின் சமீபத்திய அறிக்கையை ஜனவரி மாதத்தில் WhatsApp வெளியிட்டுள்ளது. ஐடி விதிமுறைகளின்படி, ஜனவரி 1, 2022 முதல் ஜனவரி 31, 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 18,58,000 கணக்குகள் வாட்ஸ்அப்பால் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்த மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.இந்த கணக்குகள் வாட்ஸ்அப்பின் கொள்கைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் உண்மைக்கு புறம்பான மெசேஜ்களை ஃபார்வெர்ட் செய்தது, அச்சுறுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுபோல உங்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டால், வாட்ஸ்அப் சப்போர்ட்டை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். நம் கணக்கு வெரிஃபை செய்யப்பட்டு பின் மீண்டும் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.