WhatsApp அதிரடியாக 14.26 லட்ச அக்கவுண்டகள் தடை செய்யப்பட்டுள்ளது.

Updated on 04-Apr-2022
HIGHLIGHTS

வாட்ஸ்அப் பிப்ரவரி 2022 இல் 14.26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது

அடிப்படையில் இந்தக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன

இந்த தகவலை வாட்ஸ்அப் தனது மாதாந்திர அறிக்கையில் பகிர்ந்துள்ளது.

பேஸ்புக்கின் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் பிப்ரவரி 2022 இல் 14.26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது. பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் நிறுவனத்தின் சிஸ்டம் மெக்கானிசம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை உங்களின் தகவலுக்குக் கூறுவோம். இந்த தகவலை வாட்ஸ்அப் தனது மாதாந்திர அறிக்கையில் பகிர்ந்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் (பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28-ம் தேதிக்குள்) 14.26 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகளை தடை செய்துள்ளதாக அரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்க்கு வந்த புகார்கள் அடிப்படையிலும், வாட்ஸ்ஆப் மற்றும் இந்திய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் ஆப்பிற்கு வந்த 194 புகார்களின் அடிப்படையில் வெறும் 19 கணக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் வாட்ஸ்ஆப் வைத்துள்ள தடுப்பு அம்சங்களுக்கு கீழ் விதிமீறல்களை செய்த கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பின் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ஐடி சட்டம் 2021, விதி எண் 4(1)(d)-ன் கீழ் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் வன்முறையை பரப்புவோர், தீய செயல்களில் ஈடுபடுவோர் ஆகியோரின் தரவுகள் பயனர்கள் அளிக்கும் ஃபீட்பேக் மற்றும் அதிகம் பிளாக் செய்யப்படும் கணக்குகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு, அவை தடை செய்யப்படுகின்றன என வாட்ஸ்ஆப் விளக்கம் அளித்துள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :