Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Oct 01 2021
Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

அழைப்பவர்களின் அடையாளத்தை கண்டுபிடித்தல், கால்-பிளாக்கிங், ஃபிளாஷ்-மெசேஜ் அனுப்புதல், கால் ரெக்கார்டிங் செய்தல், இணையம் வழியிலான சாட் மற்றும் அழைப்புகள் போன்றவைகளை நிகழ்த்த உதவும் ஒரு ஆப் தான் ட்ரூகாலர் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்!, இப்படியான ட்ரூகாலர், சமீப காலமாக அதன் மொபைல் ஆப்பில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது, ஏற்கனவே பெரிய அளவிலான பயனர் தளத்தை வைத்துள்ள ட்ரூகாலர் இதுபோன்ற நடவடிக்கைகளால் பயனர் அனுபவத்தை மேம்படுத்திய வண்ணம் உள்ளது.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

whatsapp மிஞ்சியது இந்த அம்சம்.

ட்ரூகாலர் ஆனது அதன் மொபைல் ஆப்பில் சத்தமின்றி ஒரு புதிய அம்சத்தினை இணைத்துள்ளது. அதாவது Truecaller Group Chat-ஐ அறிமுகம் செய்துள்ளது. தற்போது கிடைக்கக்கூடிய மற்ற மெசேஜிங் ஆப்களில் இல்லாத சுவாரசியமான மற்றும் தனித்துவமான அம்சங்களை இந்த Truecaller Group Chat கொண்டுள்ளது என்பது கூடுதல் சுவாரசியம்.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்.

 ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த ட்ரூகாலர் க்ரூப் சாட் அம்சம் கிடைக்கும் என்று ட்ரூகாலர் அறிவித்து உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக கிடைக்கும் ட்ரூகாலர் அப்டேட் வழியாக ட்ரூகாலர் பயனர்கள் இந்த க்ரூப் சாட்டை பெற முடியும்.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

தனித்துவமான அம்சங்கள் 

க்ரூப் சாட் என்பது ஒரு மெசேஜிங் ஆப்பில் மிகவும் தேவைப்படும் அம்சங்களில் ஒன்றாகும், அதை உணர்ந்த ட்ரூகாலர் இறுதியாக அதை தனது ஆப்பில் இணைத்துள்ளது. ட்ரூகாலரில் கிடைக்கும் க்ரூப் சாட் ஆனது சில தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது: அது Group invites, hidden number, chat மற்றும் SMS களுக்கு இடையிலேயான தடையற்ற ஸ்விட்சிங் and categorised Inbox போன்றவைகள் ஆகும்

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

Hidden நம்பர் அம்சம் 

இந்த க்ரூப் சாட் அறிமுகத்தின் வழியாக ட்ரூகாலர் நிறுவனம் பிரபல வாட்ஸ்அப்பை வம்பு இழுக்கிறது என்றே கூறலாம். ட்ரூகாலர் க்ரூப் சாட்டின் தனித்துவமான அம்சமாக இதன் ஹிட்டன் நம்பர் திகழ்கிறது. வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உங்கள் மொபைல் நம்பர் ஆனது அந்த க்ரூப்பின் ஒவ்வொரு மெம்பருக்கும் காண்பிக்கப்படும்.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

கான்டெக்ட் லிஸ்ட் மறக்கப்படும்.

ஆனால் ட்ரூகாலரில், உங்களின் மொபைல் எண்ணை ஏற்கனவே காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமித்து வைக்காத மெம்பர்களுக்கு உங்களின் மொபைல் நம்பர் காட்சிப்படுத்தப்படாது. உங்களின் மொபைல் எண் ஆனது யாருக்காவது தேவைப்படும் பட்சத்தில், அவரால் உங்களுக்கு காண்டாக் ரெக்வஸ்ட் ஒன்றை அனுப்பமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சொல்லுங்கள் இது ஒரு தனித்துவமான அம்சம் தானே!

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

க்ரூப் இன்வைட்ஸ் அம்சம் 

க்ரூப் இன்வைட்ஸ். இது வாட்ஸ்அப்பில் இருப்பது போன்று யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானால் ஒரு க்ரூப்பில் சேர்க்கலாம் என்பது போல் இல்லாமல், ஒரு க்ரூப்பில் ஒருவரை சேர்க்கும்போது குறிப்பிட்ட நபருக்கு ஒரு இன்வைட் அனுப்பப்படும். அதை ஏற்றுக்கொண்ட பின்னரே அவர் க்ரூப்பில் இணைவார், இந்த இன்வைட்ட்டை உங்களால் நிராகரிக்கவும் முடியும். நிராகரிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட க்ரூப்பில் நீங்கள் சேர்க்கப்பட மாட்டீர்கள்.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

Inbox அம்சம் 

இதுதவிர எஸ்.எம்.எஸ் அல்லது க்ரூப் சாட்களுக்கு இடையில் பயனர்கள் தடையின்றி மாறவும் ட்ரூகாலர் க்ரூப் சாட் அனுமதி வழங்குகிறது. மேலும் உங்களின் இணைய இணைப்பு ஆனது ஆக்டிவ் ஆக இல்லாத பட்சத்தில் சென்ட் பட்டன் ஆனது நீலம் அல்லது பச்சை நிறமாக இருப்பதையும் நீங்கள் காணலாம். கடைசியாக, Categorised Inbox, இது ஸ்பேம் அல்லது அன்சேவ்டு நம்பர்களில் இருந்து வரும் மெசேஜ்களை அவற்றின் அடிப்படையிலேயே பிரித்து, வகைப்படுத்தி காட்டும் ஒரு இன்பாக்ஸ் அம்சம் ஆகும்.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

Whatsapp யில் சிக்கல் வருமா 

வரலாம்! ஏனெனில் Truecaller என்பது உலகெங்கிலும் உள்ள பிரபலமான காலர் ஐடி சேவையாகும், இது Android மற்றும் iOS ஆகிய இரண்டு பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. கடந்த ஆண்டு, ட்ரூகாலர் சில தனியுரிமை சிக்கல்களை எதிர்கொண்டது, அந்நேரத்தில் ட்ரூகாலர் தடை செய்யப்படுமா என்கிற அளவிற்கு பேச்சு அடிப்பட்டது. ஆனால் நிறுவனம் அந்த சிக்கலை நன்றாக கையாண்டு, பயனர்களிடையே இழந்த நம்பிக்கையை மெல்ல மெல்ல மீட்டு வருகிறது.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

சுறுசுப்பாக  வேலை செய்யும் அம்சம் 

கடந்த 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ட்ரூகாலர் அதன் ஆப்பில் பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு, இது ட்ரூகாலர் பே சேவை இணைக்கப்பட்டது, இது பயனர்கள் யுபிஐ சேவையைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு பணத்தை பறிமாற்ற அனுமதித்தது.

Truecaller யில் இப்படி ஒரு அம்சம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ட்ரூகாலர் வாய்ஸ் அம்சம் அறிமுகம் ஆனது, இது இணையம் வழியிலான குரல் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இப்போது, க்ரூப் சாட் சேவையை நான்கு தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இதுபோன்ற அம்சங்கள் ஆனது வாட்ஸ்அப்பில் இல்லை என்பதால், இது நிறைய பயனர்களை ஈர்க்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதே வெளிப்படை!