இந்த 10 விஷயத்தை தப்பி தவறி கூட வாட்ஸ்அப்பில் செய்யாதீங்க.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Mar 30 2021
இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

ஹேக்கர்கள்  மிக பெரிய அளவில் நம்மை  ஹேக் செய்யகூடிய  ஆப் யில் வாட்ஸ்அப்  ஒன்று, நம்முள் பல பேருக்கு தெரிவதில்லை  whatsapp  யில் ஒரு  மிக பெரிய spamware இருப்பது, தெரிந்தும் தெரியாமல் செய்த  தவறினால் மிக பெரிய  வில்லங்கத்தில்  கொண்டு விட்டுவிடுகிறது மேலும் நாம் இங்கு  பல தவறுகளை நமக்கு தெரியாமலே செய்கிறோம் அதனால் நடக்கும் விபரீதம் என்ன இது போன்ற இந்த 10 தவறை நீங்கள் whatsapp யில் செய்தல் உடனடியாக தவிர்த்து விடுங்கள்.

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

1 தேவை இல்லாத லிங்க் க்ளிக் செய்யாதீர்கள்.

உதாரணமாக நமக்கு வரும்  Whatsapp Forward மெசெஜில்  ஆபர்  லிங்க் ஒன்று ஷேர் செய்து அதில் நமக்கு ஆசையை  தூண்டிவிடுவது, அதாவது விலை  அதிக  உள்ள பொருள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறுவார்கள் Ex: Rs ,50, 000 உள்ள ஐபோன் வெறும்  RS,12000 விலையில் கிடைக்கும் மேலும் அதை  வாங்க இந்த லிங்க் க்ளிக் செய்யுங்கள் என்ற போலியான அமேசான் வெப்சைட் அல்லது  பிளிப்கார்ட் யின் போலியான வெப்சைட் திறக்கும்  நாம்  அதை வாங்கும்  ஆர்வத்தில் நமது அனைத்து  பேங்க்  தகவல் மற்றும் சொந்த தகவலை  ஷேர்  செய்து விடுவோம்  இதன் மூலம் நம்  வாங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கப்பட்டு விடுகிறது  இது போன்ற சிக்கலில் பல பேர்  இன்னும் மாட்டி கொள்கிறார்கள். எனவே மெசேஜ் அல்லது Forward மெசேஜில் வரும் லிங்கை க்ளிக் செய்யாமல் இருப்பது நல்லது.

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

2 போலியான வெப்சைட் 

அச்சு அசலாக பார்க்கையில் ஒரிஜினல் வெப்சைட்டை போல இருக்கும் போலியான வலைத்தளம் மக்கள் மத்தியில்  மிகவும் பிரபலமாக  இருக்கும்  Facebook,Amazon Flipkart வலைத்தளத்தை  கோண்டு போலியான வலைத்தளத்தை உருவாக்குவது, பார்க்க  என்னவோ  ஒரிஜினல் போல தான் இருக்கும் ஆனால் வெப்சைட்  லிங்க் தவறுதலாக இருப்பதை யாரும் கவனிப்பதில்லை  நம்முடைய தனிப்பட்ட தகவலை அத்தனையும் அதில் பகிர்ந்து விடுகிறோம் அத்தகைய வலைத்தளம் நமது தகவலை சேகரித்து கொண்டு பின்னால்  நமக்கே பிரச்னையை கொண்டு வருகிறது.

EX வங்கி தகவல் சேமிப்பாது, சுய விவரங்களை சேமிப்பது 

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

3. மூன்றாம் தரப்பு ஆப் (3rd party  app )

whatsapp அஃபிஷியல்  ஆப் தவற மூன்றாம் தரப்பு  ஆப் பயன்படுத்துவது உதாரணமாக GBwhatsapp , whatsapp  gold இது போன்ற  பல  ஆப்கள் இருக்கிறது, இது  போன்ற  ஆப் யாரோ ஒரு டெவலப்பர்களால்  செய்வதால்  அந்த அளவுக்கு  பாதுகாப்பானதாக  இல்லை அத்தகைய 3rd party  app  நமது  தகவலை ஹேக் செய்யும்  என்பதே உண்மை. எனவே  மக்கள் மூன்றாம் தரப்பு ஆப் பயன்ன்படுத்தமால்  இருப்பது நல்லது.

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

4 whatsapp அப்டேட் என்ற பெயரில் பணம் பறிப்பது.

சமீபத்தில்  whatsapp  இனி இலவசமல்ல பணம் கொடுக்க வேண்டும், மற்றும், whatsapp  இனி இயங்காது அப்படி இயங்க வேண்டும் என்றால்  இந்த லிங்கில் சென்று அப்டேட் செய்யுங்கள்  மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாட்ஸ்அப்பை ப்லோக் செய்ய போகிறார்  என்ற  வதந்தி பரவி வந்தது  இது போன்ற போலி செய்தியால் ஹேக்கிங்  மிக பெரிய அளவில் செய்யப்படுகிறது  என்பது  குறிப்பிட தக்கது . மேலும்  அப்டேட் செய்ய whatsapp  யின் சொந்த ஆப் அப்டேட் செய்ய வேண்டும் எந்த ஒரு லிங்க் அல்லது  fake மெசேஜ் மூலம் அப்டேட் செய்யாமல் இருப்பது நல்லது 

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

5 Whatsapp  காலிங்காள் நடக்கு விபரீதம். 

நம்முள் பல பேர் Whatsapp  ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதி பயன்படுத்துவது வழக்கம் மேலும் சாதாரண  காலிங்கில் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும் ஆனால்  Whatsapp  யின் ஆடியோ மற்றும் வீடியோ காலிங்  ரெக்கார்ட்  செய்ய முடியாது என்று எண்ணி  பல தகவல்  இங்கு ஷேர்  செய்து விடுகிறார்கள் காலிங்  ரெக்கார்ட்  செய்ய முடியாது  ஆனால்  ஸ்க்ரீன் சேவர் உதவியால்  ஆடியோ மற்றும் வீடியோ  காலிங்கை ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும் பின்னர் அதன் விளைவாக நமக்கே மிக பெரிய  பிரச்சனையில் கொண்டு போய் விடுகிறது இதில் பெரும் அளவில் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள்  எனவே  எந்த ஒரு காலிலும்  தனது  சுய விவரத்தை அல்லது தனிப்பட்ட பேச்சை பேசாமல் இருப்பது நல்லது. 

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

6  தேவை இல்லாமல் Whatsapp   நம்பரை ஷேர் செய்யாதீர்கள் 

நம்முள் பல பேர் Whatsapp   நம்பரை தர சொல்லி கேப்பார்கள், நாமும்  Whatsapp நம்பர் தானே என்று கொடுத்து விடுகிறோம் அவர் வாட்ஸ்அப்பில்  தவறாக மெசேஜ் செய்வது, காலிங்  என்று பல தொல்லை செய்வார்கள்  நாம் ப்லோக்  செய்தாலும் வேறு வேறு நம்பரிலிருந்து  நமக்கு கால் செய்வது  என்று மிக பெரிய சிக்கலில் மாட்டி கொள்கிறோம் இதில் பெரும் அளவில் பெண்களே பாதிக்க படுகிறார்கள். குறிப்பாக பெண்கள்  தெரியாதவரிடம்  Whatsapp   நம்பரை ஷேர் செய்யாமல் இருப்பது நல்லது.

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

7 தேவையில்லாத  க்ரூபில் சேர வேண்டாம்.

தேவையில்லாமல் எந்த ஒரு க்ரூபில் சேராமல் இருப்பது நல்லது ஏன் என்றால் நீங்கள் ஒரு க்ரூபில்  சேர்கிறீர்கள்  என்றால்  உங்களின்  நம்பர்  அந்த க்ரூப்பின் மூலம் அனைவருக்கு ஷேர் ஆகிவிடும். எனவே தேவை இல்லாத  க்ரூபில் சேர்வதை தவிர்ப்பது நல்லது, உதாரணமாக  உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் மட்டும் க்ரூபில்   இருப்பது நல்லது. 

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

8 Whatsapp வெப் 

Whatsapp  வெப் நாம் பயன்படுத்தும் அந்த ஆப் அப்படியே வாட்ஸாப்பில் இருந்து கம்பியூட்டரில் வெப்  கோட் பயன்படுத்தி  ஷேர் செய்து கொள்ள முடியும் ஆனால் இதை  பொது  கம்பயூட்டரில்  பயன்படுத்தாமல் இருப்பது நல்லது உதாரணமாக  Cafeteria, அலுவலகம் அல்லது உங்களின்  நண்பர்களில் லேப்டாப் அல்லது கம்பியூட்டரில்  பின்னே நமது டேட்டாவை  பேக்கப் ஆக  எடுத்து வைத்து கொண்டு  நமக்கே மிக பெரிய வில்லங்கமாக  அமையலாம்.

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

9  Whatsapp Privacy 

Whatsapp Privacy யில் நீங்கள் எப்பொழுதும் உங்கள் போட்டோ அல்லது ஸ்டேட்டஸ்  மற்றும்  உங்களின் சொந்த தகவலை  Everyone பயன்படுத்தாமல் இருப்பது நல்லது  ஏன்  என்றால் யார் வேண்டுமானாலும் உங்களின்  போட்டோவை எடுத்து கொள்ள முடியும் மற்றும்  lastseen அனைவரிடமும்  காட்டாமல் இருப்பது நல்லது மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதில் EVERYONE என்பதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. 

EVERYONE 
My Contact 
Only Me 

இந்த 10 விஷயத்தை தப்பி  தவறி கூட  வாட்ஸ்அப்பில்  செய்யாதீங்க.

10 Whatsapp Lock 

Whatsapp Chat  யாரும் பார்க்காமல் இருக்க வேண்டும்  என்று நீங்கள் நினைத்தால், Whatsapp  Fingerprint அம்சத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் இதன் மூலம்  உங்க மொபைலை  யாரிடமாவது  கொடுத்து வைத்திருந்தாலும்  பயப்புட தேவை இல்லை உங்களது அனுமதியின்றி  யாரும் பார்க்க முடியாது