ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தில் காலடி வைத்ததிலிருந்து பல நிறுவனங்களும் ஆடி போய் இருக்கிறது என்று சொல்லலாம். ஜியோவின் பல ஆபர் தாக்கு பிடிக்க முடியாமல் பல நிறுவனங்களும் திணறி வருகிறது. அந்த வகையில் நாம் எர்செல் நிறுவனம் ஜியோ ஆபர் தாக்கு பிடிக்க முடியாமல் நஷ்டத்தில் சென்றது மற்றும் நிறுவனத்தில் மேலும் தொடர முடியாமல் மூடி விட்டது. இப்பொழுது இன்னும் வோடபோன், ஐடியா,ஏர்டெல்,BSNL மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள அதன் ஆபர்களை வாரி வழங்குகிறது. அந்த வகையில் இன்று பல நிறுவனங்களின் ஆபர் தான் பார்க்க போகிறோம். வாருங்கள் பார்ப்போம்
BSNL வழங்குகிறது இலவசமாக இரண்டு மாத பிராட்பேன்ட் சேவை
பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகள அறிவித்து வரும் BSNL . தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
புதிய பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி சலுகையில் ரூ.99 விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் இன்டர்நெட் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையுடன் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 150 ஜிபி சலுகையில் ரூ.199, பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 300 ஜிபி சலுகை ரூ.299 மற்றும் BSNL . பிபிஜி காம்போ யுஎல்டி 600ஜிபி டேட்டா ரூ.399 விலையில் மூன்று சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா, 10 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.
ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா
ஜியோலின்க் ரூ.699/-ன் நன்மைகள்.!
இந்த திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த லிமிட்டிற்க்கு பிறகு வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 16 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மாதத்திற்கு 156 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.இந்த திட்டம் 28 நாட்களுக்கு வெளிடிடியாக இருக்கும்
ஜியோலின்க் ரூ.2099/-ன் நன்மைகள்.!
இந்த திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதில் லிமிட் மீறினால் வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 48 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மொத்த வேலிடிட்டி 538 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் 98 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கும்.
ஜியோலின்க் ரூ.4199/-ன் நன்மைகள்.!
இந்த திட்டத்தின் கீழ் , ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறத
வோடாபோனின் 3 ஜிபி , 2 ஜிபி என இரண்டு புதிய திட்டம்.
வோடபோன் 597
வோடபோன் தினமும் 3 ஜிபி டேட்டா 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் வழங்குவதுடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் நன்மை என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. தினசரி 100 SMS , ரோமிங் கால் இலவசம் என 84 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கிறது.
வோடபோன் 511
தினமும் இந்த திட்டத்தின் கீழ் 2 ஜிபி டேட்டா 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் வழங்குவதுடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. தினசரி 100 எஸ்எம்எஸ் , ரோமிங் கல் இலவசம் என 84 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கிறது..
டாட்டா டோகோமோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய டேட்டா திட்டம்
டாட்டா டொகோமோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: டாடா டொகோமோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும் , பயனர்கள் இந்த திட்டத்தில் எந்த வொய்ஸ் அல்லது நன்மைகளை கிடைக்காது. இந்த புதிய திட்டம் டேட்டா நன்மைகள் மட்டுமே வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி தரவு கிடைக்கும்,
சமீபத்தில் BSNL அதன் புதிய டேட்டா சுனாமி திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதில் பயனர்களுக்கு 26 நாட்களுக்கு 1.5GB டேட்டா வழங்குகிறது மற்றும் டேட்டா டொகோமோ 99ரூபாய்க்கு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்களுக்கு இருக்கிறது இருப்பினும், டோக்கோமோவின் திட்டங்கள் குறைவான டேட்டா நன்மைகள் வழங்கியது. இரு நிறுவனங்களின் திட்டங்களிலும் வொய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் சேர்க்கப்படவில்லை என்பதுதான் ஏமாற்றம்.
BSNL யின் புதிய டபுள் தமாக்கா ஆபர்
BSNL உங்களுக்கு 2GB டேட்டா இலவசமாக வழங்கப்படும். இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் அன்லிமிட்டட் கோம்போ ப்ளான்ஸ், 999, ரூ 666, ரூ. 485, ரூ 429 மற்றும் ரூ 186 ஆகியவற்றுடன் விலையில் வருகிறது. நிறுவனம் மற்றும் இந்த திட்டத்துடன் 2GB இலவசமாக வழங்க பேச்சு வார்த்தை நடக்கிறது அதாவது, உங்களுக்கு தற்போதைய திட்டத்தில் 2GB கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இதை தவிர 4G, ரூ 444, ரூ 333, ரூ 349 மற்றும் ரூ 187 ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் 3 ஜி டேட்டா STV திட்டங்களை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த திட்டங்களை நீங்கள் கூடுதல் டேட்டா கிடைக்கும்.
ஜூலை 18, 2018 முதல் பயனாளர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும் என்று BSNL அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் நீங்கள் பெறும் மற்ற நன்மைகள், உங்களுக்கு முன்னால் இருந்ததைப்போல், அதே போன்று இருக்கும்.இந்த எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று பொருள். தினசரி லிமிட் இல்லாமல் அன்லிலிமிட்டட் வொய்ஸ் கால் பயன் கிடைக்கும், ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களிலும் கிடைக்கும் ரூ 186, ரூ 429, ரூ 485, ரூ 666 மற்றும் ரூ 999.இது தவிர, ரூ 186 மற்றும் ரூ 999 திட்டங்களை உண்மையில் அன்லிமிட்டட் தரவை கொண்டு வருகிறது, தவிர, FUP பிறகு 40Kbps வேகம் நிறுவனம் உறுதி என்று கூறுகிறது. இந்த நடவடிக்கை காரணமாக, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை நிறுவனம் வழங்கி வருகிறது.அதன் STV ரூ 155 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இப்பொழுது இந்த திட்டத்தில் கூட, நீங்கள் 1.5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது, ஆனால் இப்போது இந்த திட்டத்தின் மூலம் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது,
ஐடியாவின் 30 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டம்.
இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் தற்சமயம் ஐடியா வோல்ட்இ சேவைகள் வழங்குகிறது .
இப்பொழுது ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல் வோல்ட் E சேவைகளை மேற்கொள்வோருக்கு 10 ஜிபி டேட்டாவும், நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா என மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
BSNL அதன் 5G உலக முழுதும் அறிமுகம் செய்ய உள்ளது..!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் டெலிகாம் நிறுவனம் அதன் அல்ட்ரா ஹை ஸ்பீட் 5th ஜெனரேஷன் 5G சர்விசை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் .என தகவல் வெளியாகி உள்ளது. ஜியோவின் வருகைக்கு பிறகு பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. சில நிறுவனங்கள் மட்டும் அதற்கு போட்டியாக அடிக்கடி ஆஃபர்கள் அறிவித்து தன்னை நிலைநிறுத்தி வருகின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
BSNL டெலிகாம் நிறுவனம் Nokia, ZTE போன்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 5G சேவையை 2020 வருடத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என BSNL தலைமை பொது மேலாளர்அணில் ஜெயின் கூறினார்.
BSNL அதன் Rs 155 ரூபாய் திட்டத்தின் மாற்றம்..!
BSNL Rs 155 வரும் STV ப்ரீபெய்ட் திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. இது வரை இந்த திட்டத்தில் உங்களுக்கு 1.5GB டேட்டா கிடைத்தது. ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் நிறுவனம் 2GB டேட்டா வழங்குகிறது. இருப்பினும் நிறுவனம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 17 நாட்களாக வைத்துள்ளது.
இருப்பினும் Rs 155 கொண்ட திட்டத்தை மாற்றவில்லை. ஆனால் நிறுவனம் இதன் ப்ரீபெய்ட் டேட்டா STV portfolio மற்ற அனைத்து திட்டத்தையும் மாற்றி உள்ளது இதன் அர்த்தம் நிறுவனம் போட்டியை இன்னும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதை தவிர இதன் STV திட்டத்தை மாற்றி உள்ளது. அதில் Rs 198 யின் விலையில் வரும் திட்டமும் இருக்கிறது இந்த திட்டத்தில், 24 நாட்களுக்கு உங்களுக்கு 2.5GB டேட்டா கிடைக்கும். இது தவிர,இந்த திட்டத்துடன் முழுமையாக செல்லுபடியாகும் வகையில் PRBT இலவசமாக கிடைக்கும். இது தவிர, வேறு STV யைப் பற்றி பேசினால் , அது ரூ 14, ரூ 29 மற்றும் ரூ 241 ஆகிய திட்டங்களில் வருகிறது.
ஜியோ வழங்கும் டபுள் தமாக்கா ஆபர்
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. இந்த புதிய ஆபர் பயன்படுத்தி ஜியோ , ரூ. 1.77 க்கு 4G டேட்டாக்கலை கொண்டு GB ஆனது, இது மிக குறைந்த விகிதமாகும். 149 ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ என்ட்ரி- லெவல் திட்டம் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது , 1 ஜிபி என்ற விலையை Rs 1.77. ஆக இருக்கிறது இருப்பினும் , ஜியோ இந்த வாய்ப்பை ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே வெளிடிடியாக வைத்து இருக்கிறது .
ஜியோ கூறுகிறது இந்த சேவையின் மூலம் எவ்ரிடே மோர் மோர் வேல்யூ (EDMV) க்கு பிறகு முழுமை அடையும். இந்த வாக்குறுதியின்படி, ஜியோ தொழிற்துறை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டணத்தை வழங்கும். அனைத்து நேரடி ப்ரீபெய்ட் கட்டண கட்டணங்களும் ஒரு நாளைக்கு 1.5GB கூடுதல் டேட்டா வழங்கும் நிறுவனத்தின் ரூ. 149, ரூ 349, ரூ. 399 மற்றும் ரூ 449 ஆகியவை ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாக்களுக்கு பதிலாக 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது . ரூபாய் 198, ரூ 398, ரூ 448 மற்றும் 498 ஆகிய அனைத்து திட்டங்களிலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாக்களுக்கு பதிலாக 3.5GB டேட்டாவின் நன்மை வழங்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் டபுள் தமாக்கா ஆபர்..!
லையன்ஸ் ஜியோவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.99 சலுகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த வகையில் ரூ.99 சலுகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.98 சலுகையில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சூப்பர் பாஸ்ட் இன்டர்நெட் வழங்க ஏர்டெல் புதிய திட்டம்..!
இந்தியாவில் கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நெட்வொர்க் பரப்பளவை அதிகப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.அந்த வகையில் தமிழகம் முழுக்க 2018-2019 நிதியாண்டு வாக்கில் 12,000 புதிய மொபைல் சைட்கள், ஒவ்வொரு தினமும் 32 புதிய மொபைல் சைட்களை கட்டமைக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 52,000 ஆக அதிகரிக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் பிராஜக்ட் லீப் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதே திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 3,000 கிலோமீட்டர் பரப்பளவில் புதிய ஆப்டிக் ஃபைபர்களை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் அதிவேக இணைய வசதியை வழங்க ஆப்டிக் ஃபைபர் பரப்பளவு 17,000 கிலோமீட்டர்களாக அதிகரிக்க இருக்கிறது.
ஏர்டெல் சூப்பர் 4G அதிவேக ஸ்பீட் வழங்கும் திட்டம்...!
இந்தியாவில் 4ஜி டேட்டா வேகம் மற்றும் அதிவேக டவுன்லோடு வழங்கிய நிறுவனங்களின் சுவாரஸ்ய தகவல்களை ஓபன்சிக்னல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஒட்டுமொத்த டவுன்லோடு வேகம், குறிப்பிட்ட டெலிகாம் நிறுவனத்தின் சராசரி 4ஜி வேகம், 3ஜி வேகம், வெவ்வேறு நெட்வொர்க்களில் சிக்னல் பரப்பளவு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில் நிறுவனங்கள் வழங்கிய சேவைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஏர்டெல், ஐடியா, ஜியோ மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த டேட்டா வேகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி செப்டம்பர் 2017 முதல் டவுன்லோடு வேகங்கள் தொடர்ந்து அதிகரித்து இருப்பதோடு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் சேவை சீராக இருந்ததாக ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSNL புதிய அதிரடி ஆபர் 149ரூபாய்க்கு 4GB டேட்டா வழங்கும் புதிய திட்டம்...!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஜியோ வின் டபுள் தமாக்கா ஆபருக்கு போட்டியாகவே இந்த அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BSNL புதிய ப்ரோமோஷனல் டேட்டா STV யின் Rs 149 FIFA வால்ட் கப் நாளை ஆரம்பம் ஆகும் நிலையில் இந்த புதிய ஸ்பெஷல் திட்டத்தின் கீழ் FIFA வால்ட் கப் ஸ்பெஷல் டேட்டா என அழைக்கப்படுகிறது
இதன் கீழ் தினம் தோறும் 4GB டேட்டா நன்மையை இது வழங்குகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதனுடன் இதன் ஏற்கனவே அறிவித்து இருந்த டெரிப் திட்டம் ஜூன் 14 லிருந்து ஜூலை 15 2018 வரை வேலிடாக இருக்கும் FIFA World Cup. இந்த திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கும் இந்த திட்டம் 31 நாட்களுக்கு செல்லுபடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த BSNL திட்டம் இது டெல்லி மற்றும் மும்பை தவிர அனைத்து பகுதியிலும் பொருந்தும்
ஐடியாவில் இந்த திட்டத்தில் அசத்தல் கேஷ்பேக் மற்றும் பரிசுகள் வழங்குகிறது
ஐடியாவில் இந்த திட்டத்தில் கேஷ்பேக் மற்றும் பரிசுகள் வழங்குகிறது .அந்த வகையில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையை கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சலுகையை பெற அனைத்து ரீசார்ஜ்களும் மை ஐடியா ஆப் அல்லது ஐடியா வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
இத்துடன் ஐடியா அறிவித்திருக்கும் மற்றொரு திட்டத்தில் அன்லிமிட்டெட் ரீசார்ஜ் செய்யும் போது பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கார்கள், பைக்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வென்றிட முடியும். ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஐடியா அறிவித்திருக்கும் புதிய வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது.
ஜூன் 5 முதல் ஆகஸ்டு 15-ம் தேதி வரை ஐடியா ஆப் அல்லது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பனை ரூ.199 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.