சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Sep 27 2019
சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

ஸ்மார்ட்போன்கள்  எந்த அளவுக்கு பிரபலமாகி வருகிறதோ அதே அளவுக்கு ஸ்மார்ட்போன்களும் புதிய புதிய டெக்னோலஜி உடன் வர ஆரம்பித்துள்ளது மேலும் தற்பொழுது வரும் புதிய டிவிகள்  படஜெட் வீலையிலே ஆண்ட்ராய்டு  வசதி உடன் வருகிறது.மேலும் குறைந்த விலை  பட்ஜட்டிலே AMOLED  டிஸ்பிளே மற்றும் ஸ்க்ரீன் சைஸ்  32,இன்ச் 40இன்ச் என பல இருக்கிறது. மேலும் இவை அனைத்திலும்  HRDP தொழில்நுட்பம் மற்றும் 20 வாட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது.அந்த வகையில் இன்று நாம் சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்டிவிகள் என்ன சிறப்பு  மற்றும் எத்தனை என்று பார்ப்போம் வாருங்கள்.

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

Shinco 32-இன்ச் ஸ்மார்ட் LED . டி.வி. 

இத்துடன் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட், சன் நெக்ஸ்ட், ஜியோ சினிமா, இரோஸ் நௌ, ஹங்காமா பிளே, ஆல்ட் பாலாஜி, மூவி பாக்ஸ், புளூம்பெர்க் குவின்ட், தி குவின்ட், ஹோம்வேதா போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 

ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ஏ பிளஸ் கிரேடு பேனல் 1366x768 ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த பேனலில் 1.67 கோடி நிறங்களை HRDP தொழில்நுட்பம் மற்றும் 20 வாட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டி.வி. குவாட் கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.கனெக்டிவிட்டிக்கு இரண்டு HDMI  போர்ட்கள், இரு USB ராய்டு 7.0 & 8.0 இயங்குதளங்களை சார்ந்து இயங்குகிறது. இதில் உள்ள இ-ஷேர் அம்சம் கொண்டு ஸ்மார்ட்போன் டேட்டாக்களை டி.வி.யில் பகிர்ந்து கொள்ள முடியும்.

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

Huawei Vision-TV  4K ரெசொலூஷன் டிவி 

Huawei நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட் டி.வி. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என Huawei அறிவித்துள்ளது.

இந்த சாதனத்தில் 4K குவாண்டம் டாட் ஸ்கிரீன், மெல்லிய மெட்டல் பெசல்கள் மற்றும் பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளன.Huawei விஷன் டி.வி. 65 இன்ச் மற்றும் 75 இன்ச் QLED டிஸ்ப்ளே பேனல்கள் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 55 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்ய ஹூவாய் திட்டமிட்டுள்ளது

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சம் 

VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. பியூர் ப்ரிசம் கிரேட் ஹை பிரைட்னஸ் பேனல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அடாப்டிவ் காண்ட்ராஸ்ட் மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு கூகுள் சேவைகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தலாம்.

மேலும் டி.வி.யில் பில்ட்-இன் கூகுள் குரோம்காஸ்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், புகைப்படம் போன்றவற்றை ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ்., மேக் அல்லது விண்டோஸ் சாதனங்களில் இருந்து ஸ்டிரீம் செய்ய முடியும். இத்துடன் பில்ட்-இன் டால்பி மற்றும் டி.டி.எஸ். சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்தியாவில் VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத (Non Prime )வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை வாங்கலாம்.

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

Motorola 6டிவி 

வடிவமைப்பைப் பொறுத்தவரை, மோட்டோரோலா டிவி மிக மெல்லிய பேஜில்ஸ் உடன் வருகின்றன. இந்த டிவிகள் அனைத்தும் MEMC தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இந்த தொழில்நுட்பம் டிஸ்பிளே மாற்றத்தின் தாமதத்தை நீக்குகிறது, மேலும் மென்மையான பார்வை அனுபவத்தை வழங்குகிறது. மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், மோட்டோரோலாவின் டிவியில் ஆட்டோடூன் எக்ஸ் டிஸ்ப்ளே உள்ளது, இது டால்பி விஷன் மற்றும் 1.07 பில்லியன் வண்ணங்களுடன் வருகிறது. டிவி HDR 10 ஐ ஆதரிக்கிறது மற்றும் பார்க்கும் வ்யூடிங் 
 என்கில் 117 டிகிரி ஆகும்.டிவியில் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் 2.5 ஜிபி ரேம் உள்ளது. இந்த டிவியில் குவாட் கோர் SoC செயலி மற்றும் மாலி 450 GPU  உடன் வருகிறது.டிவியின் முன்புறத்தில் 30 வாட் சவுண்ட்பார் உள்ளது. டிவி என்பது கூகிள் அசிஸ்டென்ட் மற்றும் ப்ளே ஸ்டோர் அணுகலுடன் வரும் மற்றொரு சிறப்பு. டிவி விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி பிளிப்கார்ட்டில் தொடங்கும்.

மோட்டோரோலா டிவியின் குறைவான விலை வேரியண்ட் ரூ .13,999யில் இருக்கிறது..இதில் 32 இன்ச் HD ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இரண்டாவது வேரியண்ட் நிறுவனம் 43 இன்ச்களை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ .24,999 மற்றும் முழு HD ரெஸலுசன் கொண்டுள்ளது. ரூ .29,999 விலையில் 43 இன்ச் அல்ட்ரா எச்டி டிவியையும் இந்நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

Honor Vision Pro பாப்-அப் கேமரா டிவி 

Honor விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4K யு.ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப் கொண்டிருக்கின்றன. சீனாவில் இவை அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. .புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது.Honor விஷன் மற்றும் Honor விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் 4K (3840x2160 பிக்சல்) டிஸ்ப்ளே, ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது

இரு ஹானர் விஷன் மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU மற்றும் 2 ஜி.பி. ரேம் கொண்டிருக்கின்றன. பிராசஸருடன் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம், மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், ஹானர் விஷன் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ. 38,200) என்றும் பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் ப்ரோ விலை CNY 4,799 (இந்திய மதிப்பில் ரூ. 48,200) என வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

சாம்சங்கின்  4K  HDR டிவி 

இதன் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் ஹெச்.டி.ஆர். 10 உள்ளிட்டவை புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கின்றன. இதில் பிக்ஸ்மி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தி ஃபிரேம் டி.வி.யில் QLED தொழில்நுட்பம் மற்றும் இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. தி ஃபிரேம் டி.வி. பயன்படுத்தாத சமயத்தில் ஆர்ட் மோடிற்கு சென்று கலை சார்ந்த புகைப்படங்களை திரையில் காண்பிக்கும். இத்துடன் டி.வி. வைக்கப்பட்டுள்ள அறையின் சூழலுக்கு ஏற்ப ஸ்கிரீன் பிரைட்னஸ் தானாக மாறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

தி ஃபிரேம் டி.வி. பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் முறையில் இணைந்து கொண்டு ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும் ஒன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது. பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதியும் வழங்கப்பட்டு இருப்பதால் ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் டேட்டாக்களையும் டி.வி.யில் பார்க்க முடியும்.

இந்த டிவி 32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி. விலை ரூ. 22,500 என்றும் 40-இன்ச் மாடல் விலை ரூ. 33,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

TCL  புதிய 4K  AI  ஸ்மார்ட் மாடல் டிவிகள் 

புதிய TCL  டி.வி.க்கள்  .HDR 10 வசதி, மைக்ரோ டிம்மிங் உள்ளிட்ட தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு பை சார்ந்த மென்பொருள் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள், வாய்ஸ் இன்டராக்‌ஷன், ஏ.ஐ. பிக்சர் என்ஜின், ஸ்மார்ட் சவுண்ட் என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

உயர் ரக டி.சி.எல். பி9எஸ் சீரிஸ் 65 இன்ச் மற்றும் 55 இன்ச் வேரியண்ட்கள் ரூ. 44,990 விலையில் துவங்குகிறது. டி.சி.எல். பி8இ சீரிஸ் 43, 50 மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இதன் 55 இன்ச் டி.சி.எல். பி8இ ஸ்மார்ட் ஏ.ஐ. டிவி. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த டி.வி.க்களில் யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டி.சி.எல். ஒப்பந்த அடிப்படையில் ஹாட்ஸ்டார், வூட், ஆல்ட்பாலாஜி மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.புதிய டி.வி.க்களின் இமேஜ் மற்றும் சவுண்ட் அவுட்புட் மேம்படுத்தும் விதமாக இதில் ஏ.ஐ. ஃபார்ஃபீல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

noble ஸ்கியோடோ  

நோபில் ஸ்கியோடோ  24 இன்ச் அளவில் கிடைக்கும்  ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதில் ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ப்ளிப்கார்ட் தளத்தில் டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 189 விலையில் 36 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து அதிகபட்சம் ரூ.3000 வரை தள்ளுபடி பெற முடியும்.இத்துடன் அறிமுகமான NB32R01 32-இன்ச் 1366x768 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள்

JVC  32N380C மற்றும் 24N380C  மடல் டிவி 

புதிய டி.வி.க்கள் 32N380C மற்றும் 24N380C என்ற மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இவற்றில் இன்-பில்ட் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தர காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய 
HD  டி.வி.க்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக JVC  . தெரிவித்துள்ளது.இரு டி.வி.க்களிலும் மெல்லிய பெசல்கள், ஹெச்.டி. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றன. இத்துடன் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டி.வி.க்களிலும் கேமிங் மோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பல்வேறு கேமிங் செயலிகளை பயன்படுத்த முடியும்.

இவை முறையே 32 இன்ச் மற்றும்  24 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் இரு டி.வி.க்களும் அளவுகளில் மட்டுமே வேறுபாடு கொண்டிருக்கிறது.கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு HDMI  போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு டி.வி.க்களும் ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் என ஜெ.வி.சி. தெரிவித்துள்ளது. ஜெ.வி.சி. 32N380C மாடல் விலை ரூ. 9,999 என்றும் 24N380C ஜெ.வி.சி. மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.