சமீபத்தில் பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் புதிய புதிய தொழில்நுட்பத்துடன் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது, மேலும் மக்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது முதலில் பார்ப்பது அதன் கேமரா தான் தற்பொழுது வரும் ஸ்மார்ட்போன்களில் ட்ரிப்பில் கேமரா, அதிகபட்ச கேமரா பிக்சல் போன்றவை வழங்கப்படுகிறது , அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகும் பல ஸ்மார்ட்போன்கள் மூன்று கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது இதனுடன் மிக சிறந்த பிக்சல் ரெஸலுசன் மற்றும் மூன்று கேமராக்களுடன் வரும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
SAMSUNG GALAXY S10 PLUS
Samsung Galaxy S10+ யின் பின்புறத்தில் 12+12+16 மெகாபிக்சலின் ட்ரிப்பில் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் ஒரு 12 மெகாபிக்ஸல் வைட் என்கில் சென்சார் கொண்டுள்ளது இதனுடன் மற்றொன்றில் 12 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் மூன்றாவது 16 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் சென்சார் இருக்கிறது மற்றும் இந்த சாதனத்தில் முன் புறத்தில் ஒரு 10+8 மெகாபிக்ஸல் டூயல் கேமரா கொண்டுள்ளது
Samsung Galaxy S10+ ஒரு nanometre Exynos 9820 chipset மற்றும் 12GB RAM உடன் வருகிறது இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 1TB இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 512GB வரை அதிகரிக்கலாம். Galaxy S10+ Android 9.0 Pie out of the box யில் வேலை செய்கிறது. மற்றும் இதில் 4,100mAh உடன் வருகிறது இதனுடன் இதில் உங்களுக்கு 6.4 இன்ச் உடன் 1440 x 3040 pixels ரெஸலுசன் டிஸ்பிளே வழங்கப்படுகிறது
Huawei Mate 20 Pro
Huawei Mate 20 Pro வில் ஒரு 6.39 இன்ச் QHD+ப்ளக்கிஸிபல் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.இதில் ஹுவாவே யின் 7 nm ப்ரோசெசஸ் Kirin 980 SoC கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 GB RAM மற்றும் 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில் microSD கார்ட் ஸ்லாட் கொடுக்கவில்லை இதை தவிர இதில் NM கார்ட் அணுகி அது 256 GB வரை ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் இருக்கிறது இதன் கேமரா பகுதியை பற்றுக பேசினால் Huawei Mate 20 Pro வில் 40 MP (வைட் என்கில் லென்ஸ் f/1.8 அப்ரட்ஜர் )+20 MP (அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் , f/2.2 அப்ரட்ஜர் உடன் டெலிபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது
OPPO RENO 10X ZOOM EDITION
Oppo Reno 10X zoom edition யில் 6.6 இன்ச் யின் AMOLED டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் HDR 10+ கண்டெட் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 93.1 ஸ்க்ரீன் பாடி ரேஷியோ வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த சாதனத்தின் முன் புறத்தில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் ஓசன் க்ரீன் மற்றும் ஜெட் ப்ளாக் நிற விருப்பத்தில் வாங்கலாம் இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது,
இதன் கேமரா பகுதியை பற்றி பேசினால்,இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு 48 மெகாபிக்ஸல் யின் முக்கிய சென்சார் ஆக இருக்கிறது.இதனுடன் இதில் சோனியின் IMX586 சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் அப்ரட்ஜர் f/1.7 இருக்கிறது மற்றும் இதில் இரண்டாவதாக 8 மெகாபிக்ஸல் வைட் என்கில் சென்சார் இருக்கிறது மற்றும் இதன் மூன்றாவதாக 13 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதன் கேமராவை நிறுவனம் 10X ஹைபிரிட் ஜூம் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றும் இதில் OIS அல்ட்ரா நைட் மோட் 2.0 போன்ற அம்சங்களை கொண்டுவந்துள்ளது, இதனுடன் இதன் முன் புறத்தில் 16MP ஷார்க் பின் ரைசிங் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இது புதிய லுக் வழங்குகிறது.
SAMSUNG GALAXY A80
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லைட் அவுட் கேமரா சாம்சங்கின் H -to -H டிஸ்பிளே போன்றவை இதில் வழங்குகிறது.இதனுடன் இதில் முழு டிஸ்பிளே அதாவது பேசில் இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் டிஸ்பிளே ஒரு 6.7 இன்ச் இருக்கிறது மேலும் இதன் ரெஸலுசன் 1080x2400 பிக்சல் இருக்கிறது.இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 20:1 இருக்கிறது
இதன் கேமராவை பற்றி பேசினால், கேலக்ஸி A 80 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
VIVO IQOO
6.41 இன்ச் OLED டிஸ்பிளே வாட்டர் ட்ரோப் நோட்ச் உடன் வழங்கப்படுகிறது மற்றும் இது ஒரு ப்ளாக்ஷிப் போனாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படவில்லை. இந்த கேமிங் போனில் உங்களுக்கு பிரஷர் சென்சிடிவ் பட்டன் லீக்கியூட் கூலிங் டெக்னோலஜி வழங்கப்பட்டுள்ளது
போட்டோக்கள் எடுக்க மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் 4டி கேமிங் வசதியும், சூப்பர் HDR வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக பென்ச்மார்க்கிங் தளங்களில் வெளியான தகவல்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் V1824A என்ற மாடல் நம்பரில் உறுவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
HUAWEI P30 LITE
இதில் 6.15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், GPU டர்போ 2.0, ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது
VIVO V15 PRO
புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
போட்டோ எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.
XIAOMI MI 9
Mi 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 48 எம்.பி. சோனி IMX486 பிரைமரி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,335) முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் பிரத்யேக நிறத்தை பெற லேசர் ஹாலோகிராஃபிக் வழிமுறை மற்றும் டபுள்-லேயர் கோட்டிங் பயன்படுத்தப்பட்டதாக சியோமி தெரிவித்துள்ளது. புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வழக்கமான சென்சார், டெப்த் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது
OPPO R17 PRO
சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் R17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் டிஸ்ப்ளே, 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் AI. சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டிசம்பரில் 45,990 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் Rs 39,990 யின் விலையில் இருக்கிறது Xiaomi, Samsung, மற்றும் Vivo மூலம் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த பிறகு Oppo அதன் இந்த ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது
LG V50 THINQ
LG அதன் முதல் 5G மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது அதன் பெயர் LG V50 ThinQ 5G என பெயரிடப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தவிர இதில் உங்களுக்கு குவல்கம் X50 Modem கிடைக்கிறது அது 4G லிருந்து 20 மடங்கு அதிக டெக் ஸ்பீட் வழங்குகிறது.
புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.