சமீபத்தில் பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் புதிய புதிய தொழில்நுட்பத்துடன் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது, மேலும் மக்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது முதலில் பார்ப்பது அதன் கேமரா தான் தற்பொழுது வரும் ஸ்மார்ட்போன்களில் ட்ரிப்பில் கேமரா, அதிகபட்ச கேமரா பிக்சல் போன்றவை வழங்கப்படுகிறது , உதாரணத்துக்கு 48மெகாபிக்ஸல் கேமரா மற்றும் AI தொழில்நுட்பம் கொண்டது என பல வர ஆரம்பித்துள்ளது.மேலும் நாம் இங்கு பெஸ்ட் கேமரா பற்றி நாம் பார்ப்போம் வாருங்கள்.
Redmi Note 7 Pro
ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா இதனுடன் இதில் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.ரெட்மி 7ப்ரோ இதன் விலை பற்றி பேசினால் Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மேலும் இதனுடன் பல ஆபருடன் வாங்கலாம
Samsung Galaxy M 30
சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது புதிய கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy M 20 :
இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே இதனுடன் இதில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர் கொண்டுள்ளது. மேலும் இதில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது கேமரா பற்றி பேசினால் இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9 இதனுடன் இதில் 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2 மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரட்ஜர் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் 5000 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது
Honor 10 Lite
விலை : RS 11,999
Honor 10 Lite யில் ஒக்ட்டா கோர் HiSilicon Kirin 710 ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது. Honor 10 Lite ஸ்மார்ட்போனில் GPU Turbo 2.0 உடன் வருகிறது.மற்றும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9பை யில் EMUI 9.0 யில் வேலை செய்கிறது.மேலும் இந்த போனில் 6.21 இன்ச் IPS LCD முழு HD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 2280 x 1080 பிக்சல் இருக்கிறது இதன் கேமரா பற்றி பேசினால் இதில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 13 மற்றும் இரண்டாவது 2 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் A ஸ்டெபிலைசேஷன் (AIS)சூப்பர் நைட் ஷாட் இதில் அடங்கியுள்ளது. இதனுடன் இதில் கூகுள் நைட் நைட் வெர்சனும் வழங்கப்பட்டுள்ளது குறைந்த வெளிச்சத்தில் சிறப்பாக போட்டோ எடுக்கலாம்.
Asus Zenfone Max Pro M2
Asus Zenfone Max Pro M2 6.2 இன்ச் முழு HD ஸ்க்ரீன் உடன் வருகிறது, இதனுடன் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது.இதனுடன் இதில் Corning Gorilla Glass 6 கொடுக்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் Qualcomm Snapdragon 660 SoC ப்ரோசெசருடன் 3GB ரேம் 4GB ரேம் மற்றும் 6GB வகையுடன் இருக்கிறது இதனிடம் இதில் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் 5000mAh பவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.மேலும் நாம் இங்கு இதன் கேமரா பற்றி பேசினால் இதனுடன் இதில் /1.8 அப்ரட்ஜர் மற்றும் LED பிளாஷ் உடன் 12 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் செகண்டரி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் செல்பிக்கு 13 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது.
REALME U1
புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட் AI . என்ஜின், GPU அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது பின்புறம் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி யு1 ஸ்மாரட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 3500 Mah . பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கேமரா பற்றி பேசினால் 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2 மற்றும் 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரட்ஜர் கொண்டுள்ளது. இதனுடன் இதில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, AI சோனி IMX576 சென்சார் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது
Honor 8X
Honor 8X மொபைல் போனில் ஒரு 6.5 இன்ச் Notch டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் அதில் 19.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் உங்களுக்கு டூயல் டெக்சிஜர் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேமரா பற்றி பேசினால் இதில் - 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8 மற்றும் 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா இதனுடன் இதில் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.
ஹானர் 8X ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Nokia 6.1 Plus
நோக்கியா 6.1 ப்ளஸ் பிளாஷ் சேல் ஆரம்பமாகும் நிலையில் இதன் விலை Rs 15,999 வைக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் இதில் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதனுடன் இதில் கேமரா பற்றி பேசினால் 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS மற்றும் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல் இதனுடன் இதில் 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் பிங்கரப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது
Xiaomi MI A2
இந்த சாதனத்தின் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999ரூபாயாக இருக்கிறது சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Mi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Honor 9N
புதிய ஹானர் 9N ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் 19:9 நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, கிரின் 659 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கேமரா பற்றி பேசினால், - 13 எம்பி பிரைமரி கேமரா LED ஃபிளாஷ் மற்றும் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா இதனுடன் இதில் 16 எம்பி செல்ஃபி கேமரா ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது.