ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கடந்த வாரம் தங்கள் ப்ரீ-பெய்டு திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது. அதன் பிறகு, ஜியோவின் திட்டத்தின் விலை அதிகரிக்கக் காத்திருந்தது, அது இப்போது முடிந்துவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ இப்போது அதன் ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலைகளை 20 சதவீதம் அதிகரித்துள்ளது, ஜியோவின் குறைவான திட்டம் இப்போது ரூ 91 ஆக மாறியுள்ளது, இது முன்பு ரூ.75 ஆக இருந்தது. ஜியோவின் ரூ.91 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் மொத்தம் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் 50 எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள்.
ஜியோவின் 84 நாள் திட்டமான ரூ.329 இப்போது ரூ.395 ஆகிவிட்டது. இதில், மொத்தம் 6 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 1000 மெசேஜ்கள் கிடைக்கும்.
ரூ.555 திட்டம் இப்போது ரூ.666 ஆகிவிட்டது. இதில், 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 மெசேஜ்கள் கிடைக்கும்
ஜியோவின் 84 நாள் திட்டமான ரூ.599 இப்போது ரூ.719 ஆகிவிட்டது. இதில், தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 மெசேஜ்கள் கிடைக்கும்.
84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்நிறுவனத்தின் ரூ.379 திட்டம் தற்போது ரூ.455 ஆக மாறியுள்ளது. இதில் மொத்தம் 6 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் காலிங் வசதி உள்ளது.
ரூ.598 திட்டம் இப்போது ரூ.719 ஆகிவிட்டது. இதில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 மெசேஜ்கள் கிடைக்கும்
ரூ.698 திட்டம் இப்போது ரூ.839 ஆகிவிட்டது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் 100 மெசேஜ்கள் வழங்கப்படும்.
84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்நிறுவனத்தின் ரூ.379 திட்டம் தற்போது ரூ.459 ஆக மாறியுள்ளது. இதில் மொத்தம் 6 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் காலிங் வசதி உள்ளது.
வோடஃபோனின் ரூ.599 ப்ரீ-பெய்டு திட்டம் இப்போது ரூ.719. 84 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் காலிங் வசதி உள்ளது.
வோடபோன் ஐடியாவின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது ரூ.839. 84 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் காலிங் வசதி உள்ளது.