தேவையற்ற பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Jun 01 2022
தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

பெரும்பாலான மொபைல் பயனாளர்களை எரிச்சலைடைய செய்வது தான் இந்த பேங்க் கிரெடிட் கார்ட் 
தொடர்பான கால்கள். தேவை இல்லாதபோதும், நாளுக்கு இரண்டு கால்கள் என்ற ரீதியில் இந்த மார்க்கெட்டிங் கால்கள் நம்மை வந்து தொல்லை செய்வதுண்டு. இது போன்ற கால்களை சில செயலிகள் கொண்டு தடுத்தாலும், புதிய போன் எண்களைக் கொண்டு மீண்டும் நம்மை தொல்லை செய்வது இவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

இவ்வாறு வரும் கால்கள், வியாபார உத்தியாக தான் பார்க்கமுடிகிறது. கடன் பெறுபவர்கள் தான் கவனமாக இந்த கால்களை  கையாள வேண்டும். கடன் தேவை இல்லையென்றால், இதுபோன்ற போன் எண்களில் இருந்து வரும் கால்களை துண்டித்துவிடுங்கள். மேலும் இது போன்ற க்ரெடிட் கார்ட் மற்றும் லோன்  பற்றிய கால்களால்  மனா உளைச்சல் ஏற்படுகிறது மேலும் பெரும்பாலான மக்கள் இது போன்ற கால்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற கேள்வி வருகிறது.

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

உங்களுக்குத் தேவைப்படாத வணிக கால்களை பெறாமல் இருக்க, உங்கள் லேண்ட்லைன் அல்லது மொபைலில் இருந்து 1909 (டோல் பிரீ ) என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும். 'START DND' அல்லது 'START 0' ஐ 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் தேவையற்ற கால்களை பிளாக்  செய்யமுடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில் உள்ள வணிக அழைப்புகளை மட்டும் பெற கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும். விருப்பங்கள் நீங்கள் தேர்வு செய்வதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கல்வி சார்ந்த கால்கள் மட்டும் கிடைக்க வேண்டுமென்றால் 'START 3' என்று டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

முழுமையாக தடுக்க இந்த முறையை பின்பற்றுங்கள்.

START 0'- முழுமையாக தடுக்க (Fully blocked)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

'START 1'- வங்கி, இன்சூரன்ஸ், நிதி மற்றும் க்ரெடிட் கார்டுகள்  (Banking, Insurance, Financial products and credit cards)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

'START 2'- ரியல் எஸ்டேட் (Real Estate)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

'START 3'- கல்வி (Education)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

'START 4'- ஆரோக்கியம் (Health)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

'START 5'- நுகர்வோர் பொருட்கள் மற்றும் வாகனங்கள் (Consumer goods and automobiles)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

'START 6'- தொடர்பு, ஒளிபரப்பு, பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Communication, Broadcasting, Entertainment and IT)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

'START 7'- சுற்றுலா (Tourism and Leisure)

தேவையற்ற  பேங்க் லோன் மற்றும் க்ரெடிட் கார்ட் லோன் கால்கள் வருவதை எப்படி தடுப்பது?

நீங்கள் SMS வாயிலாக பதிவு செய்ததை நீக்க 1909 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் (கட்டணம் இலவசம்) அல்லது STOP DND என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். இவை வழிமுறைகள் பின்பற்றினால் கூட, சில நேரங்களில் உங்களுக்கு அழைப்புகள் வரலாம். ஆனால், நீங்கள் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் அளவிற்கு அது உங்களை வருத்தாது என்று நம்புகிறேன்.