12GB ரேம் உடன் அசத்தும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Feb 03 2020
12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

சந்தையில் மேலும் பல புதிய புதிய  டெக்னோலஜி  உடன்  பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி  வருகிறது.அந்த வகையில்  தற்பொழுது  8GB லிருந்து 12GB  ரேம் உடன்  பல ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில்  இந்த லிஸ்டில்  சமீபத்தில் அறிமுகமான பல நிறுவனங்களின் சாதனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன,  அந்த வகையில் நாம்  இன்று 12GB ரேம் உடன் வரும் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Samsung Galaxy S10 Plus

Samsung Galaxy S10 Plus மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் டைனமிக் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் கொண்ட பிரைமரி கேமரா சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ONEPLUS 7 PRO

இதன் கேமரா பற்றி பேசினால் கேமரா பிரிவில் டிரிப்ள கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன் 7P len கொண்டு f/1.6 அப்ரட்ஜர் உடன்  1/2.25" சோனி IMX586 பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமரா f/2.4 அப்ரட்ஜர்  உடன் 3x சூம் வசதியை பெற்றும், 16 மெகாபிக்சல் பெற்ற 117°அல்ட்ரா வைட் கேமரா f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதுசெல்பி கேமரா பற்றி பேசினால் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என பாப் அப் செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது மேலும் இதில்; 12GB ரேம் உடன் இது 256GB ஸ்டோரேஜில் வருகிறது.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ROG Phone 2

ROG Phone 2 வில் ஸ்னாப்ட்ரகன் 855+ SoC, 12GB LPDDR4X RAM இதனுடன் இதில்  512GB UFS 3.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஏர் தூண்டுதல்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா சப்போர்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மூலம் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்பிளே உள்ளது.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Samsung Galaxy Note 10, Plus 

Samsung Galaxy Note 10, மற்றும் Galaxy Note 10+  பார்க்க ஒரே மாதிரியே தோற்றம் அளிக்கும்..கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  6.3 இன்ச் FHD பிளஸ் 2280x1080 பிக்சல் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன்  வழங்கப்பட்டுள்ளது.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

XIAOMI BLACK SHARK 2 

புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR . வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க லுட்ரிகஸ் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு.-வில் ஏற்படும் வெப்பத்தை அதிகபட்சம் 14 சதவிகிதம் வரை குறைக்கும். 

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Nubia Red Magic Mars RNG Edition
புதிய நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக ஹார்டுவேர் ஸ்விட்ச்சை ஆன் செய்யும் போது ரெட் மேஜிக் கேம் ஸ்பேஸ் 2.0 எனும் பிரத்யேக டேஷ்போர்டு திறக்கும். இது கேமிங் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து, கேம்களை மிக வேகமாக லான்ச் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமிங் சார்ந்து இருக்கும் பல்வேறு வசதிகளை மிக எளிமையாக இயக்கலாம்.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ZTE Axon 10 Pro

Axon 10 Pro தற்போது 12 ஜிபி ரேம் உடன் வரும் ஃபான்ஸ் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், டிரிபிள் ரியர் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றுடன் வரும் ஒரு நல்ல வழி. போனாக இருக்கிறது மேலும் இந்த [போனில் 6.47 இன்ச் வளைந்த எட்ஜ் டிஸ்பிளே உள்ளது மற்றும் இந்த போன் அண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Xiaomi Mi 9 Transparent Edition

Xiaomi Mi 9 का Transparent Edition 12 ஜிபி ரேம் வருகிறது, இது வழக்கமான பதிப்பிலிருந்து வேறுபடுகிறது. இந்த தொலைபேசி அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் ஆடம்பரமான பின் கவர் வழங்குகிறது.

12GB  ரேம் உடன் அசத்தும்  சிறந்த ஸ்மார்ட்போன்கள்

OnePlus 6T McLaren Edition

புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. புதிய ராப் சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 20 நிமிடங்களில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். புதிய ஸ்மார்ட்போன் மற்றும் சார்ஜர் என இரண்டிலும் அந்நிறுவனம் இன்டகிரேட்டெட் சர்கியூட்களை வழங்கி இருக்கிறது.

இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெக்லாரெனின் பிரத்யேக ஸ்டைல் மற்றும் வரலாற்றை பரைசாற்றும் வகையில் பிரத்யேக ஸொப்ட்வர் அனிமேஷன்கள் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.