சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஸ்மார்ட்போன்கள் என்பது முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ச்சி அடைய புதிய ஸ்மார்ட்போன்களை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது, அந்த வகையில் அசத்தலான டிஸ்பிளே, நல்ல பேட்டரி பவர்கேமரா ப்ரோசெசர் மற்றும் தற்பொழுது ட்ரண்டில் இருக்கும் பாப்-கேமரா மற்றும் ட்யூ ட்ரோப் செல்பி கேமரா என்ற பல அசத்தலான அம்சங்களுடன் வருகிறது அந்த வகையில் 12000ரூபாய் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன் பற்றி பார்ப்போம் வாங்க.
Xiaomi Redmi Note 9 புதிய Redmi Note 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்வழங்கப்பட்டுள்ளது இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Xiaomi Redmi 9 Prime Redmi 9 Prime ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
Samsung Galaxy M11 Samsung Galaxy M11 யில் ஒரு 5000mAh பேட்டரி மற்றும் 13MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது மற்றும் இதன் விலை Rs 12,000,கீழ் இருக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் OneUI 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 யில் இயக்ங்குகிறது
Realme 5i ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், புதிய ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Realme Narzo 10 Realme Narzo 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Redmi 8A Dual REDMI 8A DUAL ஸ்மார்ட்போனை VoWifi சப்போர்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது தவிர, தொலைபேசியில் ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது.. இது தவிர, புதிய ஆரா எக்ஸ் கிரிப் டிசைனையும் போனில் கிடைக்கிறது . இதன் மூலம், பயனர்கள் தொலைபேசியில் நல்ல பிடியைப் பெறப் போவதாக நிறுவனம் கூறுகிறது. இது தவிர, உங்களுக்கு போனில் 18W வேகமான சார்ஜிங்கையும் வழங்குகிறது., மேலும் இந்த குறைந்த விலை சாதனம் யூ.எஸ்.பி டைப் சி போர்ட்டையும் கொண்டுள்ளது.
Realme 5s Realme 5S யில் ஒரு 6.5 இன்ச் மினி ட்ரோப் டிஸ்பிளே உடன் வருகிறது.இந்த போனின் ஸ்க்ரீன் டு- பாடி ரேஷியோ 89% இருக்கிறது.realme 5s ஆண்ட்ராய்டு 9பை யின் கீழ் ColorOS 6 யில் வேலை செய்கிறது. ப்ரோசெசர் பற்றி நாம் பேசினால், உங்களுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.
Vivo U20 vivo u20 மொபைல் போன் இரட்டை சிம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கூடுதலாக இது ஆண்ட்ராய்டு 9 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 9 இல் இயங்குகிறது. தொலைபேசியில் நீங்கள் 6.53 அங்குல FHD + திரை மற்றும் தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 675 ஆகியவற்றைப் வழங்குகிறது. இது தவிர, உங்களுக்கு இந்த போனில் 6 ஜிபி ரேம் வழங்குகிறது..
Moto G9 மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
Oppo A5 2020 ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், நான்கு பிரைமரி கேமராக்கள், 5000 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது