தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ச்சி அடைய புதிய புதிய ஸ்மார்ட்போன்களை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது, அந்த வகையில் அசத்தலான டிஸ்பிளே, நல்ல பேட்டரி பவர்கேமரா ப்ரோசெசர் மற்றும் தற்பொழுது ட்ரண்டில் இருக்கும் பாப்-கேமரா மற்றும் ட்யூ ட்ரோப் செல்பி கேமரா என்ற பல அசத்தலான அம்ஸங்களுடன் வருகிறது அதையும் தாண்டி தற்பொழுது மிகவும் பாப்புலராக நான்கு கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வர ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் நாம் பல அசத்தலான தொழில்நுட்பத்துடன் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டமபர் மாதத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
Nokia 7.2
நோக்கியா 7.2 சிறப்பம்சங்களை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது.
Nokia 6.2
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்களில், இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. ஹெச்.டி.ஆர் 10 வசதி, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வு ஆகிய அம்சங்களுடன் 6.3-இன்ச் fullHD+ திரையை கொண்டுள்ளது.
இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A10S
புதி்ய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Lava-Z93
லாவா நிறுவனம் இசட்93 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட்93 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இசட்92 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டியூ டிராப் நாட்ச் மற்றும் 1520x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லெவல் ஏ.ஐ. போட்டோ ஸ்டூடியோ, ப்ரோ மோட் பானரோமா, ஏ.ஆர். ஸ்டிக்கர் மற்றும் ஹெச்.டி.ஆர். மோட் வழங்கப்பட்டுள்ளது.
Motorola One Action
புதிய மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன், எக்சைனோஸ் 9609 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, 5 எம்.பி. டெப்த் கேமரா, 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆக்ஷன் வீடியோ கேமரா, மேம்பட்ட வீடியோ ஸ்டேபிலைசேஷன், 2.0µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்படுகிறது.
Realme 5
Realme 5 இன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், இந்த சாதனம் 6.5 இன்ச் மினி-டிராப் முழு ஸ்க்ரீன் டிஸ்பிலேவை கொண்டுள்ளது, இது ஸ்க்ரீனில் இருந்து பாடி டு ரேஷியோ 89% ஆகும். ஸ்மார்ட்போனுக்கு ஒரு கிரிஸ்டல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது மற்றும் போன் கிரிஸ்டல் நீலம் மற்றும் கிரிஸ்டல் ஊதா வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Realme5 ப்ரோவை குவாட் கேமரா அமைப்பையும் Realme5 கொண்டுள்ளது. இது 240fps ஸ்லோ-மோ வீடியோ, 190 டிகிரி பார்வையை வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-அங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மைக்ரோ லென்ஸ் மற்றும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
REALME 5 PRO
REALME 5 மற்றும் REALME 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளன.
Realme 5 Pro வில் 6.3 இன்ச் யின் பெரிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் நிறத்தின் வகைகளை பற்றி பேசினால்,ஸ்டால் கிரீன் மற்றும் ஸ்பார்க்கிங் ப்ளூ ஆகியவை விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
Xiaomi Mi A3
சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இதில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமரா நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களை வழங்குகிறது.
Realme X
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.