Zepp நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்தியாவில் அறிமுகம்.

Updated on 19-Jul-2021
HIGHLIGHTS

ஹூவாமி நிறுவனத்தின் துணை பிராண்டான செப் இந்தியாவில் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்து இருக்கிறது

செப் இசட் (Zepp Z) என அழைக்கப்படும்

இந்த ஸ்மார்ட்வாட்ச் வலதுபுறத்தில் மூன்று பட்டன்கள் உள்ளன.

ஹூவாமி நிறுவனத்தின் துணை பிராண்டான செப் இந்தியாவில் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்து இருக்கிறது. செப் இசட் (Zepp Z) என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
 
அம்சங்களை பொருத்தவரை செப் இசட் மாடலில் 1.39 இன்ச் 454×454 பிக்சல் கலர் டிஸ்ப்ளே, தொடுதிரை வசதி கொண்ட AMOLED பேனல் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வலதுபுறத்தில் மூன்று பட்டன்கள் உள்ளன.

மேலும் இதில் இதய துடிப்பை டிராக் செய்யும் சென்சார், உடலின் சுவாச அளவை கண்டறியும் சென்சார், மன அழுத்தம் மற்றும் உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார்கள் உள்ளன. இத்துடன் 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஜி.பி.எஸ்., 340 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்தியாவில் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 25,999 ஆகும். இதன் விற்பனை ஜூலை 20 ஆம் தேதி துவங்குகிறது.  

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :