Xiaomi யின் அசத்தலான Mi Watch Lite அறிமுகமாகியது
புதிய எம்ஐ வாட்ச் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி வலைதளத்தில் எம்ஐ வாட்ச் லைட் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன
சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய எம்ஐ வாட்ச் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எம்ஐ வாட்ச் லைட் மாடல் அந்நிறுவனத்தின் சர்வதேச வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சர்வதேச சியோமி வலைதளத்தில் எம்ஐ வாட்ச் லைட் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இதன் விலை மற்றும் விற்பனை பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
புதிய எம்ஐ வாட்ச் லைட் மாடலில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி வாட்ச் மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சதுரங்க வடிவம், 1.4 இன்ச் கலர் டிஸ்ப்ளே, வலதுபுறத்தில் பவர் பட்டன், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
எம்ஐ வாட்ச் லைட் மாடலில் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக் கண்ட்ரோல் வசதி, ஐடில் அலெர்ட்கள், கால், ஆப்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 9 நாட்கள் பேட்டரி பேக்கப், அதிகபட்சம் 120 வாட்ச் பேஸ்களுக்கான சப்போர்ட், எமோஜி சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள பிபிஜி சென்சார் பயனரின் இதய துடிப்பு விவரங்களை தொடர்ந்து டிராக் செய்யும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile