XIAOMI MI BAND 4 பேண்ட் அறிமுகம், இது சுமார் 20 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும்.
புதிய Mi பேண்ட் சாதனத்தில் 0.95 இன்ச் AMOLED கலர் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ் கொண்டிருக்கும் புதிய Mi பேண்ட் 4 மாடலுடன் 77 வகையான வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன.
Xiaomi யின் அதன் Mi Band அணியக்கூடிய அடுத்த Mi Band 4 அறிமுகம் செய்தது. இந்த புதிய சதசனத்தில் அப்க்ரேட் டிஸ்பிளே உடன் வருகிறது மற்றும் கடந்த தலைமுறை யின் MI பேண்ட் மிக சிறந்த கஸ்டமைசேஷன் உடன் வருகிறது Mi Band 4 மூன்று வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதன் டாப் வேரியண்டில் NFC மற்றும் Alipay வின் சப்போர்டுடன் வருகிறது.
Xiaomi MI BAND 4 சிறப்பம்சங்கள்.
புதிய Mi பேண்ட் சாதனத்தில் 0.95 இன்ச் AMOLED கலர் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ் கொண்டிருக்கும் புதிய Mi பேண்ட் 4 மாடலுடன் 77 வகையான வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்த பேண்ட் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டிருக்கிறது. இதில் 6-ஆக்சிஸ் ஹை-பிரெசிஷன் சென்சார் மற்றும் 6 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 மாடல் அவெஞ்சர்ஸ் எடிஷனும் கிடைக்கிறது. இத்துடன் கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் மற்றும் ஐயன் மேன் ரிஸ்ட் பேண்ட்களும் கிடைக்கின்றன.
– 0.95 இன்ச் 120×240 பிக்சல் AMOLED 24பிட் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
– 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ்
– நேரம், நடக்கும் தூரம், இதய துடிப்பு, செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கும்
– வாய்ஸ் அசிஸடண்ட் சேவைக்கு மைக்ரோபோன்
– பி.பி.ஜி. (Photoplethysmography) / இதய துடிப்பு சென்சார்
– உடல்நலனை கண்காணிக்கும், உறக்கத்தை டிராக் செய்யும்
– டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் + டிரை-ஆக்சிஸ் கைரோ, கேபாசிட்டிவ் வியர் மாணிட்டரிங் சென்சார்
– 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– ப்ளூடூத் 5.0 LE, என்.எஃப்.சி.
– 135 எMah / 125 எம்Mah . (என்.எஃப்.சி.) பேட்டரி
Xiaomi கூறுகிறது இந்த புதிய Mi Band 4 20 நாட்கள் வரையிலான பேட்டரி லைப் வழங்கும் மற்றும் NFC வெர்சன் 15 நாட்கள் வரை பேட்டரி லைப் வழங்குகிறது.
விலை மற்றும் விற்பனை
Mi பேண்ட் 4 பிளாக், பரிவுன், புளு, ஆரஞ்சு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4NFC எடிஷன் விலை 229 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை 349 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.3500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile