இந்திய ஸ்மார்ட்-வியபில் பிராண்டு ஸ்வாட் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் புதிதாக ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏர்லிட் 004 தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவோருக்கு ஏற்ற மியூசிக் வழங்க ஏதுவாக புது இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் ஸ்வாட் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை விளம்பரப்படுத்த இந்திய அணியின் பிரபல கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்தது. இத்துடன் ஆர்மர் 007 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் ஸ்வாட் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
ஸ்வாட் ஏர்லிட் 004 இயர்பட்ஸ் காதுகளில் மிகவும் சவுகரிய அனுபவம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 தர ஸ்வெட் ப்ரூப் வசதி கொண்டிருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.0 வசதி உள்ளது. இதை கொண்டு பத்து மீட்டர்கள் தொலைவில் உள்ள சாதனங்களுடனும் இணைப்பில் இருக்க முடியும். ஏர்லிட் 004 இயர்பட்ஸ் உடன் காந்த வசதி கொண்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.
இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேசில் 400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமைாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். இதன் இயர்பட்களில் 40 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. முன்னதாக ஸ்வாட் நிறுவனம் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
இந்திய சந்தையில் புதிய ஸ்வாட் ஏர்லிட் 004 இயர்பட்ஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஸ்வாட் லைப்ஸ்டைல் மற்றும் அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. இதோடு முன்னணி ஆப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது..