Sennheiser நிறுவனம் இந்தியாவில் மொமன்ட்டம் வையர்லெஸ் 3 ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போனில் மூன்று ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட்களும், டிரான்ஸ்பேரண்ட் ஹியரிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹெட்போனில் உள்ள ஸ்பீக்கர் சிஸ்டம் 42 எம்.எம். டிரான்ஸ்டூசர்களால் இயங்குகிறது. இது ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தும்.. இதேபோன்று ஹெட்போனினை மடிக்கும் போது தானாக ஆஃப் ஆகிவிடும். மேலும் ஹெட்போனை காதில் இருந்து எடுத்ததும், பாடல் நிறுத்தப்பட்டு விடும், பின் காதில் வைத்ததும் பாட்டு இயங்க துவங்கும். இதில் ஆன், ஆஃப் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால், ஹெட்போனினை திறக்கும் போது அது தானாக ஆன் ஆகிவிடும்
முன்னதாக சென்ஹெய்சர் நிறுவனம் மொமண்ட்டம் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொமண்ட்டம் ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்களை தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை இயக்க புதிய ஹெட்போனில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. சென்ஹெய்சர் மொமண்ட்டம் வயர்லெஸ் 3 ஹெட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய சென்ஹெய்சர் மொமண்ட்டம் 3 ஹெட்போனின் விலை ரூ. 34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது