OnePlus Watch கோபால்ட் லிமிடெட் எடிஷன் விற்பனை தேதி அறிவிப்பு.
இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்சின் பம்பர் விற்பனை
லிமிடேட் எடிஷன் ஒன்பிளஸ் வாட்ச் நன்றாக இருக்கிறது
முன்பதிவு இன்று தொடங்குகிறது, முதல் விற்பனை ஜூலை 16 அன்று
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலையும் ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. தற்போது லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய விற்பனை ஜூலை 16 ஆம் தேதி துவங்கும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலில் 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, SpO2 மாணிட்டரிங், GPS, 5ATM+ IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 4 ஜிபி மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் கோபால்ட் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலியில் ஜூலை 7 முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 ஆகும். முன்பதிவு செய்வோர் ஜூலை 12 முதல் ஜூலை 15 ஆம் தேதிக்குள் மீதி தொகையை செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறை போன்ற சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 15 வரை வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile