ஒன்பிளஸ் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை நோர்ட் தொடரின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது, ஒன்பிளஸ் நார்ட் வாட்ச். ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் 1.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, ஒன்பிளஸ் நார்ட் வாட்ச்சில் ரத்த ஆக்ஸிஜன் டிராக்கர் உட்பட பல சுகாதார அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் மூலம், பெண்களின் மாதவிடாய்களைக் கண்காணிக்கும் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய நார்டு வாட்ச் மாடலில் 1.78 இன்ச் 325PPI AMOLED ஸ்கிரீன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஆன்லைன் கஸ்டமைசேஷன் வசதியுடன் 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச் கேஸ் சின்க் அலாய் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வலதுபுறம் ஒரு பட்டன் மற்றும் சிலிகான் ஸ்டிராப் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இது 105-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. இதில் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி, யோகா, கிரிகெட் உள்பட பல்வேறு விளையாட்டுகள் அடங்கும்.
ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் டீப் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஒன்பிளஸ் மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.