ONEPLUS BAND பிட்னஸ் பேண்ட் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகம்.
ஒன்பிளஸ் பேண்ட் 1.1 இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது
ஒன்பிளஸ் பேண்ட் 14 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது
ஒன்பிளஸ் பேண்ட் ஸ்போ 2 மானிட்டர், ஹார்ட் துடிப்பு சென்சார் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் பிட்னஸ் பேண்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஃபிட்னெஸ் டிராக்கர் குறைந்த மற்றும் இரத்த-ஆக்ஸிஜன் செறிவு மானிட்டர், இதய துடிப்பு சென்சார் மற்றும் பல அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. ஒன்பிளஸ் பேண்டிற்கான 14-நாள் பேட்டரி ஆயுளையும் கோருகிறது, மேலும் இது ஒன்பிளஸ் ஹெல்த் துணை பயன்பாட்டுடன் இணைகிறது.
ஒன்பிளஸ் பேண்ட் சிறப்பம்சங்கள்
– 1.1 இன்ச் 126×294 பிக்சல் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
– நோட்டிபிகேஷன் வசதி
– மியூசிக் கண்ட்ரோல், கேமரா ஷட்டர் கண்ட்ரோல்
– இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங்
– ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
– உடற்பயிற்சி மோட்கள்
– 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப்
– ப்ளூடூத் 5
– ஐபி68+ 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 110 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ஒன்பிளஸ் பேண்ட் மாடலில் 1.1 இன்ச் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 3 பிரத்யேக உடற்பயிற்சி மோட்கள், ஐபி 68 + 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ரியல்-டைம் இதய துடிப்பு டிராக்கிங் வசதி, எஸ்பிஒ2 சென்சார் மற்றும் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் 100 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் பேண்ட் மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile