Noise ColorFit Pro 4 Alpha ஸ்மார்ட்வாட்ச் வெறும் ரூ,3,799 விலையில் அறிமுகம்.
Noise ColorFit Pro 4 Alpha இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் AMOLED 1.78 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்வாட்ச்சின் இந்திய விலை ரூ.3,799 ஆகும்
Noise ColorFit Pro 4 Alpha இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இதில் பல சிறப்பான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் AMOLED 1.78 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது InstaCharge™ தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம், வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி ஆயுளைப் பெற முடியும். இது 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜிங்கை வழங்குகிறது.
கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் கலர்ஃபிட் ப்ரோ 4 சீரிசில் நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த மூன்றாவது மாடல் ஆகும். புது வேரியண்டில் சிறு மாற்றங்கள், புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பால்ம் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு டிஸ்ப்ளேவை ஆஃப் செய்ய முடியும். இதற்கு கைகளை ஸ்கிரீன் மீது வைத்தாலே போதுமானது. இத்துடன் டேப்-டு-வேக் அம்சம் மூலம் ஸ்கிரீன் மீது ஒரே க்ளிக் செய்தால் ஸ்கிரீனை ஆன் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் வலது புறத்தில் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ளதை போன்ற டிஜிட்டல் கிரவுன் இடம்பெற்று இருக்கிறது.
அலுமினியம் அலாய் பில்டு கொண்டிருக்கும் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் டிராக்கர், மென்ஸ்டுரல் சைக்கில் மாணிட்டர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை தகவல்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வானிலை, பங்கு சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் அதிக அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பின்க், புளூ, வைன் மற்றும் டியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை டிசம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile