ஹார்ட் பீட் சென்சார் கொண்ட பிட்னஸ் பேண்ட் 0.96 டிஸ்பிளே உடன் அறிமுகம்.
இது IOS மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனங்களை சப்போர்ட் செய்யும்
இந்தியாவில் களர்பிட் 2 எனும் புதிய பிட்னஸ் பேண்டை ஸ்மார்ட்டெக் நிறுவனமான நாய்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது.இதில் உள்ள 14 ஸ்போர்ட்ஸ் மோடில் ஒன்றை செலக்ட் செய்து கொள்ளலாம். இதில் இன்-பில்ட் ஆக்டிவிட்டி டிராக்கர், இதய துடிப்பு சென்சார், ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்லீப் டிராக்கர், செடன்ட்டரி ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கபப்ட்டுள்ளன.புதிய ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தில் 0.96 இன்ச் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடுதிரை வசதி வழங்கப்படவில்லை எனினும், இதன் கீழ்புறம் டச் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை
நாய்ஸ் கலர்ஃபிட் 2 ஃபிட்னஸ் பேண்ட் இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டஸ்ட் பின்க், ட்விலைட் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது
நாய்ஸ் கலர்ஃபிட் 2 சிறப்பம்சங்கள்:
– 0.96 இன்ச் எல்.சி.டி. கலர் ஸ்கிரீன்
– ப்ளூடூத் 4.0
– ஐ.ஒ.எஸ். 8.0, ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும்
– இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் டிராக்கர், ஃபிட்னஸ் டிராக்கர்
– ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
– 14 வித ஸ்போர்ட்ஸ் மோட்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 90 Mah பேட்டரி
– யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி
இது IOS மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனங்களை சப்போர்ட் செய்யும். மேலும் இதில் ஐ.பி. 68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.இந்த பேண்ட் சாதனத்தில் கால்கள் , மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் களுக்கு நோட்டிஃபிகேஷன் வசதி வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile