ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைப்ரிட் ஹெச்.ஆர். என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஃபுல் ரவுண்ட் ரீட்-அவுட் டிஸ்ப்ளே, ஹார்ட் பீட் சென்சார், ரேபிட் சார்ஜிங் போன்று பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை
ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். காலிடர் ஸ்மோக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சார்டர் ரோஸ் கோல்டு-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேரியண்ட் விலை 215 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 15,275) என்றும் சார்டர் பிளாக் லெதர், காலிடர் பிளாக் சிலிகான் மற்றும் காலிடர் டார்க் பிரவுன் லெதர் வேரியண்ட் விலை 195 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 13,850) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை நவம்பர் 18 ஆம் தேதி துவங்குகிறது.
ஃபாசில் ஹைப்ரிட் சிறப்பம்சம்.
ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 42 எம்.எம். டையல், ஆல்வேஸ்-ஆன் ரீட் அவுட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகள், குறுந்தகவல், சமூக வலைத்தள தகவல் மற்றும் இதர நோட்டிஃபிகேஷன்களை வாட்ச் திரையில் பார்க்க முடியும். இத்துடன் வழக்கமான வாட்ச்களில் உள்ள விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
இத்துடன் வாட்ச் ஃபேஸ் டையல்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும், பல்வேறு உடற்பயிற்சி மோட்கள், ஆட்டோ டைம், இரண்டாவது டைம் சோன், மியூசிக் கண்ட்ரோல், அலாரம் டைமர், ஸ்டாப் வாட்ச் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் இதய துடிப்பு சென்சா் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள பட்டன்களை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். அதன்படி வாட்ச் பட்டன்களில் மியூசிக், தேதியை பார்ப்பது மற்றும் பல்வேறு இதர அம்சங்களை இயக்கும்படி செட் செய்யது கொள்ளலாம்.
ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச்
ப்ளூடூத் 4.2 எல்.இ. அம்சம் மூலம் இணைந்து கொள்ளும் வசதி உள்ளது. இது ஐபோன் 5, ஐ.ஒ.எஸ். 10 மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளம் கொண்ட சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இது 3ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
மேலும் இதில் 16 எம்.பி. மெமரி, அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரத்திற்கும் அதிக நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கும் என ஃபாசில் தெரிவித்துள்ளது. இதில் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளதால் ஒருமணி நேரத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடும்