Xiaomi தனது முதல் Pro Mi பேண்ட் மற்றும் OLED டச் ஸ்க்ரீனுடன் கூடிய உயர்நிலை Intel Evo லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரோ மாடல் ஸ்மார்ட் பேண்ட் 1.64 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது Mi பேண்ட் 7 டிஸ்ப்ளேவை விட அகலமானது. இது மட்டுமின்றி, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 7 ப்ரோவின் 1.47 இன்ச் டிஸ்ப்ளேவை விட இது பெரியது.
Mi பேண்ட் 7 மாடலில் உள்ள அம்சங்கள் இதிலும் இடம்பெற்று உள்ளது. ஆனால் சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. சியோமி பேண்ட் 7 மாடலில் 1.61 இன்ச் AMOLED 192×490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.
மேலும் இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பேண்ட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த அம்சங்கள் சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடலிலும் இடம்பெற்று உள்ளது..