Xiaomi தொடர்ந்து இந்தியாவில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது, மேலும் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், அணியக்கூடிய சாதனங்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய துறையை அறிமுகப்படுத்துகிறது. சியோமி தனது உடற்தகுதி மையமான தயாரிப்பு சியோமி மி பேண்ட் 3 ஐ மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
MI BAND 3I PRICE
சியோமி Mi பேண்ட் 3ஐ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
MI BAND 3I SPECS
– 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் தொடுதிரை டிஸ்ப்ளே
– நோட்டிஃபிகேஷன்களை பார்க்கும் வசதி
– உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
– 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டணட்
– 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
– ப்ளூடூத் 4.2 எல்.இ.
– ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணையந்து இயங்கும்
– 110 Mah பேட்டரி
சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பேண்ட் 3ஐ ஃபிட்னஸ் பேணட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய Mi பேண்ட் மாடலில் 0.78 இன்ச் OLED தொடுதிரை டிஸ்ப்ளே, 5 ஏ.டி.எம். வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கிறது. இதனை அணிந்து கொண்டு தண்ணீரில் 50 மீட்டர் ஆழத்தில் பயன்படுத்த முடியும்.
இதய துடிப்பு சென்சார் இல்லாத Mi பேண்ட் 3ஐ மாடலில் வானிலை விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இத்துடன் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை நிராகரிக்க பட்டனை அழுத்திப்பிடித்தால் போதும். 110 Mah பேட்டரி கொண்ட Mi பேண்ட் 3ஐ 20 நாட்கள் ஸ்டான்ட்பை வழங்குகிறது