ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் கேட்ஜெட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான இன்பேஸ் இந்திய சந்தையில் அர்பன் LYF எனும் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங், 1.75 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பிட்னஸ் டிராக்கிங் சென்சார், IP67 சான்று மற்றும் இதர அம்சங்களை கொண்டுள்ளது.
அர்பன் LYF ஸ்மார்ட்வாட்ச் 1.75 இன்ச் அளவில் 240×240 ரெசல்யூஷன் சதுரங்க வடிவ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ப்ளூடூத் 4 கனெக்டிவிட்டி அம்சம் கொண்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஏற்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பில்ட்-இன் சென்சார்கள் இதய துடிப்பு, இசிஜி, கலோரி, எஸ்பிஒ2, ரத்த அழுத்தம் மற்றும் உறக்கம் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கின்றன.
இதனுடன் வரும் ஸ்டிராப்களை கழற்றி மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இவை ஜெட் பிளாக் கேஸ் மற்றும் மிட்நைட் பிளாக் பேண்ட், சில்வர் கேஸ் மற்றும் பிராஸ்ட் வைட் பேண்ட், ரோஸ் கோல்டு கேஸ் மற்றும் பின்க் சால்மன் பேண்ட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் அழைப்புகள், சமூக வலைதளம், குறுந்தகவல், வானிலை நோட்டிபிகேஷன் மற்றும் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அழைப்புகள் இன்றி இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என்றும் அழைப்புகளை பயன்படுத்தும் பட்சத்தில் 2 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என இன்பேஸ் தெரிவிக்கிறது.
இந்தியாவில் அர்பன் LYF ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது அர்பன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கிறது. மார்ச் 5 ஆம் தேதிக்குள் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.