HUAWEI நிறுவனம் தனது GT2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HUAWEI வாட்ச் GT2 சிறப்பம்சங்கள்:
– 1.2-இன்ச் / 1.39-இன்ச் ( 390×390 பிக்சல்) / ( 454×454 பிக்சல்) AMOLED டச் டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் ஏ1 சிப்
– ப்ளூடூத் 5.1
– 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
– ஜி.பி.எஸ். வசதி
– மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்
– ப்ளூடூத் காலிங்
– இதய துடிப்பு சென்சார்
– 15 உடற்பயிற்சி மோட்கள்
– 455 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இதில் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 500 பாடல்களை பதிவு செய்து கேட்டு ரசிக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 42 எம்.எம். மற்றும் 46 எம்.எம். அளவுகளில் 1.2 இன்ச் மற்றும் 1.39 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
புதிய ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் மேம்பட்ட ப்ளூடூத் பிராசஸிங் யூனிட், சக்திவாய்ந்த ஆடியோ பிராசஸிங் யூனிட், அ்ட்ரா-லோ பவர் போன்ற அம்சங்கள் நிறைந்த ஹூவாயின் கிரின் ஏ1 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதில் மொத்தம் 15 ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 46எம்.எம். ஸ்போர்ட் பிளாக் விலை ரூ. 15,990, 46எம்.எம். லெதர் வெர்ஷன் ரூ. 17,990 மற்றும் 46எம்.எம். மெட்டல் வெர்ஷன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட், அமேசான், க்ரோமா போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 42 எம்.எம். மாடல் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.