Huawei Band 4 Pro NFC வசதியுடன் அறிமுகம்.

Updated on 11-Dec-2019
HIGHLIGHTS

புதிய பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5டி வளைந்த தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

Huawei நிறுவனத்தின் பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பேண்ட் 3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

இதில் ஹோம் பட்டன், கன்டினுவஸ் ஹார்ட் ரேட் டிராக்கிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஜிபிஎஸ் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5டி வளைந்த தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 

Huawei Band 4 Pro  ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 0.95 இன்ச் 240×120 பிக்சல் AMOLED தொடுதிரை கலர் டிஸ்ப்ளே
– ப்ளூடூத் 4.2 எல்.இ
– பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர், செடன்ட்டரி ரிமைண்டர்
– 6-ஆக்சிஸ் சென்சார்கள்
– PPG ஹார்ட் ரேட் சென்சார்
– அழைப்புகள், குறுந்தகவல்கள் நோட்டிஃபிகேஷன்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி
– 11 ஸ்போர்ட் மோட்கள்
– மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல்
– 100 Mah  பேட்டரி

ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ பிளாக், ரெட் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 4,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :