HUAWEI பிட்னஸ் பேண்ட் 3 மற்றும் HUAWEI பேண்ட் 3E இந்தியாவில் அறிமுகம்..!
HUAWEI நிறுவனம் வாட்ச் ஜி.டி. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இரண்டு புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் பேண்ட் 3 மற்றும் ஹூவாய் பேண்ட் 3E என இவை அழைக்கப்படுகின்றன.
HUAWEI நிறுவனம் வாட்ச் ஜி.டி. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இரண்டு புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் பேண்ட் 3 மற்றும் ஹூவாய் பேண்ட் 3E என இவை அழைக்கப்படுகின்றன.
ஹூவாய் பேண்ட் 3 மாடலில் 0.95 இன்ச் AMOLED டச்ஸ்க்ரீன் வசதி கொண்ட டிஸ்ப்ளே, 2.5D கர்வ்ட் கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் ஃபிரேம் ஒன்று டிஸ்ப்ளேவை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சிலிகான் ஸ்டிராப் கொண்டு அணிந்து கொள்ளளலாம்.
இந்த பேண்ட் அப்லோ 3 சிப் மூலம் இயங்குகிறது. இதில் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உறக்கத்தை கண்கானிப்பதோடு, இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் ஐ.ஆர். எனும் சென்சார் இதயதுடிப்பை டிராக் செய்யும். இந்த பேண்ட் அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை வழங்குகிறது.
ஹூவாய் பேண்ட் 3E ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கும், ஸ்டான்ட்பை மோடில் 21 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களிலும், IOS 9.0 மற்றும் அதன்பின் வெளியான பதிப்புகளை கொண்ட சாதனங்களில் சப்போர்ட் செய்யும்.
25 கிராம் எடை கொண்டிருக்கும் ஹூவாய் பேண்ட் 3 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இது 50 மீட்டர் வரையிலான தண்ணீரிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஹூவாய் பேண்ட் 3E அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இதில் புதிதாக ஃபுட்வியர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டப்பயிற்சியின் போது 97 சதவிகிதம் வரை சரியான விவரங்களை வழங்குகிறது. இதற்கென 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 3 விலை ரூ.4,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் ஹூவாய் பேண்ட் 3 கிடைக்கிறது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பேண்ட் 3இ மாடலின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பின்க் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile