முன்னணி அணியக்கூடிய பிராண்ட் Garmin அதன் 20வது ஆண்டு விழாவில் கார்மின் Forerunner 965 மற்றும் கார்மின் Forerunner 265 உட்பட இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்மின் ஸ்மார்ட்வாட்ச்களின் சிறப்பு என்னவென்றால், இவை உலகின் மிக உயர்ந்த பேட்டரி பேக்கப் ஸ்மார்ட்வாட்ச்கள் ஆகும். கார்மினின் இந்த கடிகாரங்களுடன் AMOLED டிஸ்ப்ளேவும் கிடைக்கிறது.
Garmin Forerunner 965 யின் விலை 67,490 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.மற்றும் இது ப்ளாக், எம்பி எல்லோ கலரில் வாங்கலாம்.அதுவே Garmin Forerunner 265 யின் விலை 50,490 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கடிகாரத்தை கருப்பு மற்றும் அக்வா நிறத்தில் வாங்கலாம். இரண்டு கைக்கடிகாரங்களின் விற்பனை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து தொடங்கியுள்ளது.
Garmin Forerunner 965 மற்றும் Garmin Forerunner 265 இந்த இரண்டு வாட்சிலும் GPS இன்பில்ட் கிடைக்கிறது.இதை தவிர இந்த வாட்ச்சில் ஸ்ட்ரெஸ், ஸ்லிப் VO2 Max, ட்ரைனிங் ஸ்டேட்டஸ் ஹார்ட் ரேட் ட்ரேக்கர் போன்ற ஹெல்த் அம்சங்களுடன் வருகிறது.
Forerunner 965 உடன் டைட்டேனிக் பெசில் கிடைக்கிறது. இதில் 1.4 இன்ச்சின் AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. மற்றும் இதில் பேட்டரி பேக்கப் 23 நாட்களுக்கு வழங்கும் என கூறப்படுகிறது. உலகின் எந்த கடிகாரத்தையும் விட இது மிக உயர்ந்தது. 31 மணிநேர பேட்டரி ஆயுள் GPS மோடிலும் கிடைக்கிறது.
Forerunner 265 உடன் கொரில்லா க்ளாஸ் 4 ப்ரொடெக்சன் உடன் வருகிறது. இதை தவிர இதில் 1.3 யின் AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. Garmin Forerunner 265 யின் 13 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் தரும். GPS மோட்யில் இதன் பேட்டரி 20 மணி நேரம் வரை இயங்கும். Garmin Forerunner 965 மற்றும் Garmin Forerunner 265 இரண்டு வாட்சிலும் பயனர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க, இந்த வாட்ச் ஸ்டாமினா மற்றும் அக்யூட் க்ரோனிக் ஒர்க்லோட் ரேட்டிங் அம்சங்களுடன் வருகிறது.