ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகம்.
ஃபயர் போல்ட் ராக்கெட் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது
இந்திய சந்தையில் ஃபயர் போல்ட் ராக்கெட் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது
ஃபயர் போல்ட் ராக்கெட் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், போட், அமேஸ்ஃபிட், ரியல்மி மற்றும் இதர பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
விலை தகவல்.
இந்திய சந்தையில் ஃபயர் போல்ட் ராக்கெட் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஃபயர் போல்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
ஃபயர் போல்ட் சிறப்பம்சம்.
வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்ட ஃபயர் போல்ட் ராக்கெட் 1.3 இன்ச் HD டிஸ்ப்ளே, வலது புறம் பட்டன், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெப், டிஸ்டன்ஸ், கலோரி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் கொண்டிருக்கிறது. இதனால் ப்ளூடூத் இணைப்பில் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile