ஃபயர்-போல்ட் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் ஃபயர்-போல்ட் ஹல்க்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட் உடன் புளூடூத் அழைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஃபயர்-போல்ட் ஹல்க் வாட்ச் 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் பல விளையாட்டு முறைகளைக் கொண்டுள்ளது. மேலும், நான்கு வண்ணங்களில் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடிகாரத்தில் உள்ளமைக்கப்பட்ட கேம்களையும் பெறுகிறது. ஃபயர்-போல்ட் ஹல்க் வாட்டர் ரெசிஸ்டண்டிற்க்கான IP67 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
ஃபயர்-போல்ட் ஹல்க் ரூ.3,499 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபயர்போல்ட் வாட்ச் கருப்பு, சாம்பல், தங்கம் மற்றும் வெள்ளி வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த கடிகாரத்தை இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம்.
ஃபயர்-போல்ட் ஹல்க் 368 x 448 பிக்சல் ரெஸலுசன் கொண்ட 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வாட்ச்சில் அழைப்பதற்கான மைக் மற்றும் ஸ்பீக்கரும் உள்ளது. இந்த கடிகாரத்திலிருந்தே நீங்கள் யாரையும் அழைக்கலாம் மற்றும் ஒருவரின் போனை பெறலாம். இந்த ஸ்மார்ட்வாட்சுடன் AI குரல் உதவியாளரும் ஆதரிக்கப்படுகிறது. கடிகாரத்தில் புளூடூத் v3 ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.
Fire-Boltt Hulk உடன் இரத்த ஆக்ஸிஜனைக் கண்காணிப்பதற்கான SpO2 சென்சார் உள்ளது. இது தவிர, நிகழ்நேர இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் வசதியும் இதில் உள்ளது. இந்த கடிகாரம் உங்கள் உறங்கும் முறையையும் கண்காணிக்கும். இதன் மூலம் போனின் கேமரா மற்றும் இசையையும் கட்டுப்படுத்தலாம். Fire-Bolt Hulk உடன் 100 விளையாட்டு முறைகள் உள்ளன. பேட்டரியைப் பொறுத்தவரை, சாதாரண பயன்பாட்டில் ஆறு நாட்கள் மற்றும் காத்திருப்பு பயன்முறையில் 15 நாட்களுக்கு இயக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.