DIZO Watch D Plus ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்.

DIZO Watch D Plus ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்.
HIGHLIGHTS

டிசோ பிராண்டின் புதிய டிசோ வாட்ச் D பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

இதில் 1.85 இன்ச் ஸ்கிரீன், 550 நிட்ஸ் பிரைட்னஸ், 2.5D வளைந்த டெம்பர்டு கிளாஸ், 17 சதவீத பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது

300 எம்ஏஹெச் பேட்டரி, 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

டிசோ பிராண்டின் புதிய டிசோ வாட்ச் D பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1.85 இன்ச் ஸ்கிரீன், 550 நிட்ஸ் பிரைட்னஸ், 2.5D வளைந்த டெம்பர்டு கிளாஸ், 17 சதவீத பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் ஃபிரேம், 22mm, கழற்றக்கூடிய சிலிகான் ஸ்டிராப், 3ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் 5.1, ஹார்ட் ரேட் சென்சார், வைப்ரேஷன் மோட்டார், 3.-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், வளைந்த டெம்ப்பர்டு கிளாஸ், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர், அலாரம், வாட்டர் ரெசிஸ்டண்ட், 300 எம்ஏஹெச் பேட்டரி, 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

புதிய டிசோ வாட்ச் D பிளஸ் மாடல் கிளாசிக் பிளாக், சில்வர் கிரே மற்றும் டீப் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நவம்பர் 15 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo