எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு பெயர்போன கிளா நிறுவனம் இந்தியாவில் புதிய கேமிங் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய கிளா ஜி9 இயர்போன் கேமிங் பிரியர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை
கிளா ஜி9 இயர்போன் பிளாக், கிரீன் மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிளா ஜி9 கேமிங் இயர்போன்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.
இன்-லைன் மைக்ரோபோனினை கேமிங் அல்லாத சமயங்களிலும் பயன்படுத்தலாம். இயர்போன்களில் உள்ள 1.2 எம் கேபிள் ரக்கட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட டி.பி.இ. மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 3.5 எம்.எம். பிளக் 45 கோணங்களில் இருப்பதால், நீண்ட நாள் உழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டூயல் ஃபிளாங் இயர்-டிப்கள் கேமிங்கின் போது வெளிப்புற சத்தம் இடையூறை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இயர் ஹூக் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது. மற்ற இயர்போன்களை போன்று இந்த ஹெட்போன்களும் பல்வேறு கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது.
இதில் 10 mm . டிரைவர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இவை 3டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும் திறன் கொண்டவையாகும். கேமிங்கின் போது பிரத்யேக ஆடியோ எஃபெக்ட்களை தனித்துவத்தில் வழங்க இது துணை புரியும். மேலும் இதில் பூம் மைக் வழங்கப்பட்டுள்ளது. இது 360 கோணங்களில் சீராக இயங்கும்.
அதன்படி பிளே/பாஸ், அழைப்புகளை ஏற்பது/நிராகரிப்பது, பாடல்களை மாற்றுவது மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்குவது போன்றவற்றை மிக சுலபமாக மேற்கொள்ளலாம்