ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 4 மாடலை எட்ஜ்-டு-எட்ஜ் கர்வ்ட் டிள்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. இதில் ஃபால் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டிருந்தது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான OLED டிஸ்ப்ளே மற்றும் டச் மாட்யூல் உள்ளிட்டவற்றை ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் நிறுவனம் விநியோகம் செய்யும் என்றும் தெரிகிறது. OLED டிஸ்ப்ளே ப்ரோபோஷன் அளவுகளில் இந்த ஆண்டு 15 முதல் 20 சதவிகிதத்திற்கும், 2021 ஆம் ஆண்டில் 70 இல் இருந்து 80 சதவிகிதம் வரை அதிகப்படுத்த ஜப்பான் டிஸ்ப்ளே திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் 2019 ஐபோன் மாடல்களுடன் அறிமுகமாகும் என தெரிகிறது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடலில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சாங்சின் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருவாய் ஆப்பிள் வாட்ச் மூலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் நிறுவனத்திடம் இருந்து OLED டிஸ்ப்ளேக்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்துடன் LG மற்றும் போ.ஒ.இ. நிறுவனங்களும் OLED டிஸ்ப்ளேக்களை வழங்க இருக்கின்றன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களை புதிய 2019 ஐபோன் மாடல்களுடன் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.