உலகில் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஆப்பிள் ரெட் சாதனங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. தற்சமயம் இதேபோன்ற தொண்டு சேவை நோக்கில் ஆப்பிள் நிறுவனம் பிரைடு எடிஷன் ஆப்பிள் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
பிரைடு எடிஷன் வாட்ச் மாடலில் பிரத்யேக வாட்ச் ஃபேஸ்கள், வாட்ச்ஒஎஸ் 6.2.5 அப்டேட் மூலம் வழங்கப்படுகின்றன. இதே அப்டேட்டில் பிழை திருத்தங்கள் மற்றும் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.ஆப்பிள் வாட்ச் பிரைடு எடிஷன் மூலம் உலகம் முழுக்க இயங்கி வரும் LGBTQ அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
புதிய வாட்ச்ஒஎஸ் 6.2.5 பதிப்பில் பொதுவான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இசிஜி ஆப் அம்சம், சவுதி அரேபிய பயனர்களுக்கு இதய துடிப்பு சென்சார் உள்ளிட்ட வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரைடு எடிஷன் கலெக்ஷனில் பிரைடு எடிஷன் ஸ்போர்ட் பேண்ட் மற்றும் ஆப்பிள் வாட்ச் நைக் பிரைடு எடிஷன் ஸ்போர்ட் பேண்ட் என இருவித ஸ்டிராப்கள் வழங்கப்படுகின்றன. இரு ஸ்டிராப்களுடன் பொருந்தி கொள்ளும் வகையில் வாட்ச்ஒஎஸ் 6.2.5 வாட்ச் ஃபேஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன