ஹூவாமி பிராண்டு அமேஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய லைட் எடிஷன் இந்தியாவில் ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்மார்ட்வாட்ச் டீசர் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.
– 1.28 இன்ச் 176×176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் ரிஃப்ளெக்டிவ் டச் டிஸ்ப்ளே
– நோட்டிஃபிகேஷன் வசதி, ஆல்வேஸ் ஆன் கலர் டச் டிஸ்ப்ளே
– 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
– ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், டிரை ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்- டிரை ஆக்சிஸ் கைரோ
– ப்ளூடூத் 5, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இயங்கும் வசதி
– ஜிபிஎஸ்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 200 எம்ஏஹெச் பேட்டரி
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான அழகியல் ஆகியவற்றின் கலவையுடன், வெர்ஜ் லைட் ஒரு ஸ்லீப்பிங் டிராக்கரைக் கொண்டுள்ளது, இது தினசரி நிர்வாகத்தைப் பற்றி அதன் பயனர்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கிறது.