Amazfit நிறுவனம் தனது டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2020 சி.இ.எஸ். விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 12 விதிமுறைகளை பூர்த்தி செய்யும் ராணுவ தரச்சான்று பெற்று இருக்கிறது.
அமேஸ்ஃபிட் டி ரெக்ஸ் சிறப்பம்சங்கள்:
– 1.3-இன்ச் 360×360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆண்ட்ராய்டு 5 மற்றும் ஐ.ஓ.எஸ். 10 தளங்களுடன் இயங்கும்
– ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் (PPG)
– 3-ஆக்சிஸ் அக்செல்லரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார்
– டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM)
– ப்ளூடூத் 5.0 எல்.இ., GPS+GLONASS
– MIL-STD 810G சான்று
– 19 ஸ்போர்ட்ஸ் மோட்
– 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சிறப்பம்சங்களை பொருத்தவரை 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம், GPS + GLONASS, தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயன்படுத்தும் வசதி, 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. 14 ஸ்போர்ட்ஸ் மோட் பயன்படுத்தும் வசதி கொண்ட புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வடிவமைப்பு, பயோடிராக்கர் பி.பி.ஜி., எந்நேரமும் இதய துடிப்பை டிராக் செய்யும் ஆப்டிக்கல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
அமேஸ்ஃபிட் டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ஆஷ், கமோஃபிளேஜ், கிரீன் மற்றும் காக்கி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 139.9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 10,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் அமேஸ்ஃபிட் நிறுவனம் பிப் எஸ் மாடலை பல்வேறு நிறங்களால் ஆன ஸ்டிராப்களுடன் அறிமுகம் செய்துள்ளது. 30 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த சாதனத்தில் 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், 40 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.